PUBLISHED ON : அக் 23, 2021

முன்னேற்றத்துக்கு தடையாக உள்ள கருத்தை, கொள்கையை மாற்றியமைக்கும் நடவடிக்கையை குறிக்கும் சொல் புரட்சி. நம் நாட்டில் பல புரட்சிகள் நடந்துள்ளன. அவற்றின் தன்மையை பொறுத்து, வண்ணங்களை குறிப்பிட்டு பெயர் சூட்டப்பட்டுள்ளன.
அவை பற்றி பார்ப்போம்...
இந்தியாவில் விவசாய உற்பத்தியை பெருக்க நடந்த செயல்பாடுக்கு, 'பசுமை புரட்சி' என்று பெயரிடப்பட்டது. பயிரின் நிறம் பச்சை என்பதால் அந்த பெயர்.
பால் உற்பத்தியை பெருக்க எடுத்த முயற்சிக்கு, 'வெண்மை புரட்சி' என்று பெயர். பாலின் நிறம் வெண்மை என்பதால் அந்த பெயர்.
கடல் உணவு உற்பத்தியை பெருக்க நடந்த செயல், 'நீலப்புரட்சி' எனப்பட்டது. கடலின் வண்ணம், நீலம் என்பதால் அந்த பெயர் சூட்டப்பட்டது.
எண்ணெய் வித்து உற்பத்தியை பெருக்க எடுத்த நடவடிக்கை, 'மஞ்சள் புரட்சி'என அழைக்கப்பட்டது. மரபுசாரா எரிபொருள் உபயோகத்தை அதிகரிக்க மேற்கொண்ட நடவடிக்கையை, 'பிரவுன் புரட்சி' என்பர். இறால் உற்பத்தியை பெருக்க நடந்த முயற்சி, 'இளஞ்சிவப்பு புரட்சி' என அழைக்கப்பட்டது.
இப்படி வண்ணங்களால் முன்னேற்றம் கண்டு வருகிறது நம் நாடு.
