PUBLISHED ON : அக் 14, 2023

அ நிறம் | அளவு
தேவையான பொருட்கள்:
புழுங்கல் அரிசி - 2 கப்
உளுந்தம் பருப்பு - 0.5 கப்
கருப்பட்டி பொடி - 1 கப்
தேங்காய் துருவல் - 0.25 கப்
நெய், ஏலக்காய் துாள், ஆப்பசோடா, உப்பு, தண்ணீர் - தேவையான அளவு.
செய்முறை:
புழுங்கல் அரிசி, உளுந்தம் பருப்பை தனித்தனியே ஊற வைத்து உப்பு சேர்த்து அரைத்து புளிக்க வைக்கவும். பின், தேங்காய் துருவல், நெய் மற்றும் ஏலக்காய் துாள் கலக்கவும். கருப்பட்டி பொடியுடன் தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சி மாவுடன் சேர்க்கவும்.
இவற்றை கலந்து இட்லி தட்டில் ஊற்றி வேக வைக்கவும். சுவையான, 'கருப்பட்டி இட்லி!' தயார். வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.
- எம்.நிர்மலா, புதுச்சேரி.
தொடர்புக்கு: 97883 90927
