தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/மஞ்சள் வண்ணம்!

மஞ்சள் வண்ணம்!

மஞ்சள் வண்ணம்!


PUBLISHED ON : அக் 14, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 14, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ரயில் நிலையத்தில், மஞ்சள் வண்ண அறிவிப்பு பலகைகளை பார்த்திருப்பீர். குறிப்பாக, ரயில் நிலைய பெயர் பலகை மஞ்சள் வண்ணம் உடையது. அது, வெகு துாரத்தில் இருந்து பார்த்தாலும் தெளிவாக தெரியும். கவனத்தை ஈர்க்கும்.

பொதுவாக, எக்ஸ்பிரஸ் போன்ற நீண்ட துாரம் செல்லும் ரயில்கள், அனைத்து ரயில் நிலையங்களிலும் நிற்காது. நிறுத்தம் இல்லாத நிலையங்களை ரயில் கடக்கும் போது, டிரைவர் கவனமாக இருக்க வேண்டும். இந்த வண்ணம் துாரத்தில் வரும்போதே கவர்ச்சியாக தெரிவதால் எச்சரிக்கையாக செயல்பட முடியும்.

மஞ்சள் நிற பின்னணியில் கறுப்பு நிறத்தில் ஆங்கிலம், ஹிந்தி மற்றும் அந்த மாநில மொழிகளில் ரயில் நிலைய பெயர் பலகை இருக்கும். அதில், கடல் மட்டத்தில் இருந்து அந்த நிலையம் அமைந்துள்ள உயரம் எம்.எஸ்.எல்., என குறிப்பிடப்பட்டிருக்கும்.

இன்று, ரயில்கள் பற்றி விபரம் அறிய நவீன தொழில்நுட்ப வசதிகள் அறிமுகமாகியுள்ளன. இவை எதுவும் இல்லாத காலத்தில், பயணியரும், ரயில்வே ஊழியர்களும் வண்ணங்களின் ஜொலிப்பையே பெரிதும் நம்பியிருக்க வேண்டி இருந்தது.

- எம்.ஏ.நிவேதா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us