PUBLISHED ON : ஆக 08, 2014

அ நிறம் | அளவு
சுல்தான் அகமது என்பவரால் 1609ம் ஆண்டில் துவக்கப்பட்ட இந்த மசூதியின் கட்டடப் பணிகள், 1616ல் தான் முடி வடைந்தது. அதாவது, இதனை முழுமை யாகக் கட்டி முடிக்க ஏழு ஆண்டு காலம் ஆகிவிட்டன. பொதுவாகவே இதனை நீல மசூதி என்றே குறிப்பிடுவதுண்டு. காரணம், இதன் உட்புறம் முழு வதுமே நீல வண்ண இஜ்னிக் என்ற ஓடுகளால் வேயப் பட்டு அலங்கரிக்கப் பட்டுள்ளன. இவற்றில் ஆறு மெல்லிய உயரமான ஸ்தூபிகள் உள்ளன. இந்த மசூதி யின் வளாகத்தைச் சுற்றிலும், ஒரு பள்ளிக்கூடம், ஒரு மருத்துவமனை, ஒரு ஆரம்பப்பள்ளி, ஒரு பொது சமையலறை, ஒரு அங்காடி மற்றும் ஒரு சத்திரம் ஆகியவை உள்ளன. துருக்கி நாட்டிலுள்ள ஒரே மசூதி இந்த சுல்தான் அகமது மசூதி மட்டுமேயாகும்.
