தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/டுகான் பறவை!

டுகான் பறவை!

டுகான் பறவை!


PUBLISHED ON : ஆக 08, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 08, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டுகான் பறவைகளில் ஏராளமான வகைகள் உண்டு. ஒவ்வொரு இனப்பறவையின் அலகும் ஒரு வண்ணத்தில் இருக்கும். இதில் இன்னொரு ஆச்சரிய மான விஷயம் என்ன வென்றால், இந்தப் பறவையின் அலகுகள் அதன் வளர்ச்சிக் கேற்ப நிறம் மாறிக்கொண்டே இருக்கும்.

குஞ்சுகளாக இருக்கும்போது மஞ்சள் நிறமாகவும், இளம் பருவத்தில் இளம் பச்சை நிறமாகவும், சற்று முதுமையடையும்போது சிவப்பு நிறமாகவும் மாறும். பிறந்து இறப்பதற்குள் நான்கைந்து தடவையாவது அதன் அலகின் நிறம் மாறி விடும்.

இந்த டுகான் பறவைகளின் சிறகுகள் நீண்ட தூரம் பறப்பதற்கே சக்தி வாய்ந்த தில்லை. ஆனால், மரத்துக்கு மரம் தாவி பறப்பதில் வல்லமை பெற்றவை.

டுகான் பறவைகளின் அலகு மிகவும் அழகாகவும், பார்ப்பதற்கு வித்தியாசமாகவும், கனமாக உள்ளது போலவும் காணப்படும். ஆனால், அலகினுள் 'ஸ்பான்ஜ்' போன்று மெத்தென்று இருப்பதால் இப்பறவைக்கு வெயிட் தெரியாது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us