தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/புல்வாய் மான் சரணாலயம்!

புல்வாய் மான் சரணாலயம்!

புல்வாய் மான் சரணாலயம்!


PUBLISHED ON : ஜன 04, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 04, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புல்வாய் மான் என்ற, 'பிளாக்பக் மான்' இந்தியாவில் பல பகுதிகளில் உள்ளது. இதை, திருகுமான், வெளிமான், முருகுமான் என்றும் அழைப்பர். மணிக்கு, 96 கி.மீ., வேகத்தில் பாய்ந்து ஓடும் திறன் பெற்றது. ஆந்திர மாநில அரசு விலங்கு.

கர்நாடக மாநிலம், பெல்லாரி அருகே ரானே பென்னுார் பகுதியில் புல்வாய் மான்களுக்கு சரணாலயம் உள்ளது. பெங்களூரிலிருந்து, 301 கி.மீ., துாரத்தில் உள்ளது. இதன் பரப்பளவு, 119 சதுர கி.மீ., புதர் காட்டுக்குள் உள்ளது. இங்கு, 6000 புல்வாய் மான்கள் உள்ளன.

சரணாலயத்தில் வழி நெடுக, ஓநாய்களையும் காணலாம். காட்டுப் பன்றி, நரி, நீண்ட வால் குரங்கு, முள்ளம் பன்றி என, பல விலங்கினங்களும் உண்டு.

அழிவின் விளிம்பில் உள்ள, 'கிரேட் இந்தியன் பஸ்டர்ட்' என்ற கானமயில் பறவையை, இங்கு காணலாம். ஓடை சலசலப்பது போன்று, ஒலி எழுப்பும் பறவையும் இங்கு உள்ளது.

இந்த சரணாலயம் காலை, 6:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை திறந்திருக்கும்.

- பட்டு

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us