PUBLISHED ON : ஜூலை 30, 2022

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவையான பொருட்கள்:
நெல்லிக்காய் - 8
இஞ்சி - 1 துண்டு
தக்காளி - 6
காய்ந்த மிளகாய் - 8
நல்லெண்ணெய் - 4 தேக்கரண்டி
கடுகு, உப்பு, வெல்லம் - சிறிதளவு
பெருங்காயத்துாள், வெந்தயத்துாள், மஞ்சள்துாள் - தேவையான அளவு.
செய்முறை:
நெல்லிக்காய்களை சுத்தம் செய்து விதை நீக்கி, துண்டுகளாக்கி லேசாக வதக்கவும். இதனுடன் நறுக்கிய தக்காளி, இஞ்சி, காய்ந்த மிளகாய், உப்பு, வெல்லம் போட்டு நன்றாக வதக்கவும். ஆறியதும், நைசாக அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் காய்ந்ததும், கடுகு தாளித்து, வெந்தயம், மஞ்சள்துாள், பெருங்காய துாள் போட்டு, அரைத்த விழுதையும் கொட்டி, நன்கு கிளறி இறக்கவும். சத்துமிக்க, 'நெல்லிக்காய் தக்காளி தொக்கு' தயார். சாதத்துடன் பக்க உணவாக சேர்த்து கொள்ளலாம்.
- சு.சவுமியா, சென்னை.

