/
இணைப்பு மலர்
/
சிறுவர் மலர்
/
ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால? (14)
/
ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால? (14)
PUBLISHED ON : ஜூலை 01, 2016

ஹலோ... ஸ்டூடண்ட்ஸ்... ஹவ் ஆர் யு? 'சம்மர் க்ளாஸ்' எதுலயும் குழந்தைகளை சேர்க்க முடியலையேன்னு கவலைப்பட்ட பெற்றோருக்கு, இது சூப்பர் க்ளாஸ் என்றும், செலவில்லாத, பிரயோஜனமாக இருக்கு என்றும், வர்ஷிமிஸ் உங்க டீச்சிங் இனிமை, இளமை+புதுமை என்றும் வாழ்த்திய வாசக அன்பர்களுக்கு மிக்க நன்றி!
சரி.... பாடத்துக்கு போவோமா? Simple present tenseல் இரண்டு வார்த்தைகளில் வாக்கியங்களை அமைப்பது எப்படி என கற்றுக் கொண்டீர்கள். சரியா?
அடுத்து Simple past க்கு போவதற்கு முன்பாக ஒரு விஷயத்தை நீங்கள் தெரிஞ்சிக்கணும்.
அது என்ன தெரியுமா? Verb களில் Strong verb, Weak verb என இரண்டு பிரிவுகள் உண்டு. இதை முன்பே நான் சொல்லியிருந்தால் நீங்கள் பயந்து விடுவீர்கள். எனவேதான், இப்போது சொல்கிறேன். 'இதை எப்படி 'மிஸ்' கண்டுபிடிக்கிறதுன்னு தானே கேட்குறீங்க?'
சொல்லித் தர்றேன்... பொறுமை... பொறுமை...
ஒரு நிகழ்கால Verb ஐ கடந்த கால Verbஆக மாற்றும்போது ed, d, t சேர்க்க வேண்டும்.
உதாரணம்:-
இந்த ed, d, t போன்றவற்றை Weak Verbs கூடத்தான் சேர்க்க வேண்டும். Strong Verb களுடன் இவை சேராது. இது ரொம்ப முக்கியம். ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
புரியலியா? சரி இன்னொரு உதாரணம் சொல்றேன்.
இப்படி, ed, d, t சேர்த்து Past tense ஆக மாறும் வார்த்தைகள் எல்லாம் Weak verbs. இவற்றை சேர்க்க முடியாமல் வேறு மாதிரியாக மாறுபவை எல்லாமே Strong verbs ஓ.கே., வா.
இதுவரை Present tense, Past tense, Future tense பற்றி படித்தோம் அல்லவா. இப்போது புதிதாக ஒரு Tense அறிமுகமாகுது. அதுதான் Past Participle.
Past participle என்னன்னு தெரிஞ்சிக்கோங்க.
முற்றுப்பெறாத வினை (வினையெச்சம்) இச்சொல் தனித்து இயங்காது. இத்துடன் சில வார்த்தைகள் சேர்ந்தால்தான் முழுமையான அர்த்தம் கிடைக்கும். இந்த Past participles க்கு முன், have, had, has, will have போன்ற சொற்கள் இடம்பெற்றால்தான் முழுமையான வினைச்சொல்லாக மாறும். இதுபற்றி பிறகு விளக்கமாக கூறுகிறேன்.
கடைசியாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். Weak மற்றும் Strong Verbகளை Main Verb என்றும் Action verbs என்றும் கூறுவோம்.
ஓ.கே.... நீங்க ரொம்ப Tired ஆகிட்டீங்க.... அடுத்த வாரம் சந்திப்போம்.
Until then bye! bye
varshitha miss.
Present Tense - Past Tense
Refuse - Refused
Believe - Believed
Spend - Spent
Present Tense - Past tense
Return - Returned - Weak verbs
Pull - Pulled - Weak verbs
Arise - Arised அல்ல Arose - Strong verbs
Bring - Bringed அல்ல Brought - Strong verbs
எழுதிப் பழகுங்கள் Simple present வாக்கியங்கள்.
1. I go - நான் போகிறேன்.
2. She sings - அவள் பாடுகிறாள்.
3. We walk - நாங்கள் நடக்கிறோம்.
4. He talks - அவன் பேசுகிறான்.
5. They try - அவர்கள் முயற்சிக்கின்றனர்.
6. They see - அவர்கள் பார்க்கின்றனர்.
7. The baby laughs - குழந்தை சிரிக்கிறது.
8. It rains - மழை பொழிகிறது.
நீங்களும் இப்படி குட்டி குட்டி வாக்கியங்கள் அமைத்துப் பார்த்து பழகுங்கள்.

