தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால? (48)

ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால? (48)

ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால? (48)


PUBLISHED ON : பிப் 24, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 24, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஹாய்... ஹாய்... ஸ்வீட் ஸ்டுடண்ட்ஸ்... Active voice படிச்சிட்டீங்களா... 'சும்மா இருந்த, 'வர்ஷி மிஸ்' ச கிளப்பி விட்டு இப்போ ஏகப்பட்ட வாக்கியங்களை, கொடுத்து இப்படி உயிரை வாங்குறாங்களேன்'னு தானே நினைக்கிறீங்க...

'சே... சே... இல்ல மிஸ்... தமிழில் எழுவாய், பயனிலை, செயபடு பொருள் என்று இலக்கண பாடத்தில் படித்தது தான் இந்த, Active, Passive Voice என்பது தெரியாமலே இத்தனை காலத்தை வீணாக்கி விட்டோமே, என்று... ஓய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர், மாணவர்கள் வரை நிறைய பேர் கடிதம் எழுதியிருந்தீங்க... ஸோ நீங்கள் எல்லாரும் மிகவும் ஆர்வமாக படிப்பதால், உங்களுக்கு சொல்லித் தருவது மிக மிக அவசியம்.

Active voice ஐ Passive voiceஆக ஒவ்வொரு Tenseலும் எவ்வாறு மாற்றுவது என்று விரிவாக பார்ப்போமா...

Past perfect tense

I had written a letter - A

நான் ஒரு கடிதம் எழுதியிருந்தேன்.

A letter had been written by me - P

ஒரு கடிதம் என்னால் எழுதப்பட்டிருந்தது.

Present Continuous

I am writing a letter.

நான் ஒரு கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

A Letter is being written by me.

ஒரு கடிதம் என்னால் எழுதப்பட்டு கொண்டிருக்கிறது.

Active வாக்கியத்தை, Passive ஆக மாற்றும்போது, being என்பதை இணைக்க வேண்டும்.

He is giving the tickets.

அவன் டிக்கெட்டுகள் கொடுத்துக் கொண்டிருக்கிறான்.

The tickets are being given by him.

டிக்கெட்டுகள் அவனால் கொடுக்கப்பட்டு கொண்டிருக்கிறது.

Past Continuous

They were writing letters.

அவர்கள் கடிதங்கள் எழுதி கொண்டிருந்தனர்.

Letters were being written by them.

கடிதங்கள் அவர்களால் எழுதப்பட்டுக் கொண்டிருந்தது.

இது போதும் என்று நினைக்கிறேன். சில வாக்கியங்கள் Passive voiceல் இருக்கும். அவற்றை Active voiceஆக மாற்ற முடியாது.

அவற்றில் சிலவற்றை கொடுக்கிறேன்.

1. He was charged with theft.

அவன் மீது திருட்டு குற்றம் சாட்டப்பட்டது.

2. You will be punished for your negligence.

உன்னுடைய கவனக்குறைவிற்கு உனக்கு தண்டனை அளிக்கப்படும்.

3. Have you been cheated?

நீங்கள் ஏமாற்றப்பட்டீர்களா?

4. He will be pleased to see you.

உங்களை பார்த்தால் அவருக்கு மகிழ்ச்சி உண்டாகும்.

5. Gandhiji was born on october 2, 1869.

காந்திஜி, 1869ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி பிறந்தார்.

அடுத்து கட்டளை மற்றும் வேண்டுகோள் வாக்கியங்களை எப்படி Passive Voice ஆக மாற்றுவது என்று அடுத்த வாரம் சொல்லித் தர்றேன். ஓ.கே.,

Until then. bye!

Varshitha.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us