தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால? (51)

ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால? (51)

ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால? (51)


PUBLISHED ON : மார் 17, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 17, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஹலோ ஸ்டுடண்ட்ஸ்...

ஹவ் ஆர் யு? உங்களது ஏகோபித்த வரவேற்பால் இந்தப் பகுதி, 50 வாரங்களை தொட்டுவிட்டது. இன்னும் சில வாரங்களில் முடித்து விடலாம் என நினைக்கிறேன். ஆனால், பலதரப்பட்ட மாணவர்களாகிய நீங்கள், எங்களுக்கு இதை சொல்லி தாங்க... அதை சொல்லித்தாங்க என கேட்கிறீர்கள்... உங்களது அன்பு கோரிக்கையை என்னால் தட்ட முடியவில்லை.

சரி... பாடத்துக்கு போவோமா. வாக்கியங்களை மாற்றி அமைத்தல் எப்படி என்று பார்த்து வருகிறோம் இல்லையா? எதிர்மறையான வாக்கியங்களை, நேர்மறையாக மாற்றுவது எப்படி என்று பார்ப்போம்.

அதாவது, Negative வாக்கியத்தை, Affirmative வாக்கியமாக்கும்போது, என்ன மாறுதல் செய்ய வேண்டும் என பார்ப்போம்.

1. No sooner had i reached the station than the train left - Negative

நான் ஸ்டேஷனை அடைந்து கூட இருக்கவில்லை. அதற்குள் வண்டி புறப்பட்டுவிட்டது.

Scarcely had i reached the station. when the train left - Affirmative

நான் ஸ்டேஷனை அடைந்த உடனேயே வண்டி புறப்பட்டுவிட்டது.

2. Vinitha is not as beautiful as monika - N

வினிதா, மோனிகாவைப் போல் அழகி அல்ல.

Monika is more beautiful than vinitha - A

மோனிகா, வினிதாவை விட அழகானவள்.

3. No man is immortal - N

எந்த மனிதனும் அழியாதவனல்ல.

Man is mortal - A

மனிதன் அழியக் கூடியவன்.

4. No sooner did i enter the room than the thief ran away - N

நான் அறையில் நுழைந்து கூட இருக்கவில்லை திருடன் ஓடி விட்டான்.

As soon as I entered the room the thief ran away - A

நான் அறைக்குள் நுழைந்ததுமே திருடன் ஓடிவிட்டான்.

எல்லா வகை வாக்கியங்களிலும் சில மாடல் களை சொல்லி தர்றேன். அந்த மாதிரியை பயன்படுத்தி சில பல வாக்கியங்களை அமைத்து எழுதிப் பழகுங்கள்.

இன்னொரு, Interestingஆன விஷயத்தை இங்கே சொல்லப் போறேன் தெரிஞ்சிக்கோங்க.

உயிரினம் எல்லாவற்றிலும் ஆண்பால், பெண்பால் என்று உண்டு. எனினும், பொதுவாக கீழ் உயிர்கள் அஃறினையாக கருதப்படுகிறது. அதாவது, மரம், வீடு, விலங்குகள், பறவைகள் இவற்றை குறிக்கும்போது, It என்று குறிப்பிடுவது வழக்கம். இவை, அஃறினை என்கிறோம். மேலும், சில உதாரணங்கள்: Water, flower, bread, grass போன்றவை.

சிலவற்றிற்கு உயிரில்லாமல் இருந்தும், அவை உயிருள்ளவைகளாக மதிக்கப்படுகிறது. அச்சமயத்தில், அவை ஆண் பாலாகவோ, பெண் பாலாகவோ இடம் பெறும். உதாரணம், கப்பல். இதைப் பற்றி குறிப்பிடும் போது பெண்பாலாக குறிக்கப்படுகிறது.

Queen Elizabeth ship has not come yet, she is late it seems...

இப்படித்தான் சொல்ல வேண்டும். Interesting ஆ இருக்கா.... அது போலவே, Moon, country, India - இவைகள் எல்லாம் பெண்பால்; - நல்லா ஞாபகம் வச்சிக்கோங்க.

Ex: The moon is beautiful; The children love her.

நிலா அழகாக உள்ளது; குழந்தைகள் இதை மிகவும் நேசிக்கின்றனர்.

India is our country; we are her citizen.

இந்தியா நம் நாடு; நாம் அனைவரும் இந்தியாவின் குடிமகன்கள்.

நிலா மற்றும் இந்தியாவை இங்கு பெண்ணாக எண்ணி, Her பயன்படுத்துகிறோம்.

அதே சமயம் சூரியன் - Sun, மரணம் - Death இவை இரண்டும் ஆண் பால் வகையை சேர்ந்தது.

இந்த விஷயம் உங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கும்னு நினைக்கிறேன். ஆங்கிலத்தின் விதிகள் அனைத்தையும் சொல்லி தர்ரேன்... பேசி அசத்துங்கள்!

பை! பை!

வர்ஷிதா மிஸ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us