PUBLISHED ON : ஏப் 14, 2017

குட் மார்னிங் மாணவாஸ்...
You people are talking English nicely... very good!
இன்றைக்கும் சில வாக்கியங்களை தருகிறேன். படித்துவிட்டு, பேசி மகிழுங்கள். ஓ.கே.,
1. Don't you scold her?
நீ அவளை திட்டுவதில்லையா?
2. Am I your slave?
நான் உன் அடிமையா?
3. Is roja your relation?
ரோஜா உன் உறவினரா?
4. Won't I get your support?
எனக்கு உன் ஆதரவு கிடைக்காதா?
5. What are they doing in the kitchen?
அவர்கள் சமையல் அறையில் என்ன செய்கின்றனர்?
6. What have you decided?
நீ என்ன முடிவு செய்தாய்?
7. I have decided to quit the job.
நான் வேலையை விட முடிவு செய்துள்ளேன்.
8. What happened to her?
அவளுக்கு என்ன நடந்தது?
9. She met with an accident.
அவளுக்கு ஒரு விபத்து நேர்ந்தது.
10. When do you go there?
நீ எப்போது அங்கே போகிறாய்?
11. When will you visit us?
எங்கள் வீட்டிற்கு எப்பொழுது வருவீர்கள்.
12. What will you do it rains?
மழை பெய்தால், நீ என்ன செய்வாய்?
13. I will postpone all my programmes for today.
இன்றைய எல்லா வேலைகளையும் தள்ளிப்போடுவேன்.
14. Why are you late today?
நீ ஏன் இன்று தாமதமாக வந்தாய்?
15. I have no knowledge about that.
எனக்கு அதைப் பற்றிய அறிவு இல்லை.
16. Whose house is this?
இது யாருடைய வீடு?
17. I don't know who own's this.
இது யாருடையது என்று எனக்கு தெரியாது.
18. Whose purse is missing?
யாருடைய பர்ஸ் தொலைந்து போனது?
19. How are you?
எப்படி இருக்கிறாய்?
20. Got fever. lying ill for two days.
காய்ச்சலால் இரண்டு நாட்களாக படுக்கையில் இருக்கிறேன்.
21. How will I face him?
எப்படி அவன் முகத்தைப் பார்ப்பேன்?
22. But you are not guilty.
ஆனால், நீ எந்த தவறும் செய்யவில்லையே.
23. How will you go there?
நீ அங்கு எப்படி போவாய்?
24. I will go there by walking.
நான் அங்கு நடந்து போவேன்.
25. How do you know my phonenumber?
என் தொலைபேசி எண், உனக்கு எப்படி தெரியும்?
26. Your number resembles mine. that is how I know it.
உன்னோட எண், என்னோட எண்ணை ஒத்திருப்பதால் எனக்கு தெரியும்.
27. How many children have you?
உனக்கு எத்தனை குழந்தைகள் உள்ளன?
28. I have one child. wife is carrying too.
எனக்கு ஒரு குழந்தை உண்டு. மனைவி இப்போது கர்ப்பமாக இருக்கிறாள்.
29. How many students are there in the class?
வகுப்பில் எத்தனை மாணவர்கள் உண்டு?
30. How long will you wait for me?
நீ எவ்வளவு நேரம் எனக்காக காத்திருப்பாய்?
31. Till 5 O Clock.
5 மணி வரை.
Until then, bye bye,
Varshitha.
