sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால? (57)

/

ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால? (57)

ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால? (57)

ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால? (57)


PUBLISHED ON : ஏப் 28, 2017

Google News

PUBLISHED ON : ஏப் 28, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹாய்... ஹாய்...

ஹவ் ஆர் யு ஸ்டுடண்ட்ஸ்... நீங்கள் கேட்டிருந்தது போல் சின்னச் சின்ன வாக்கியங்களை கொடுத்தேன். நீங்களும் ஆர்வமுடன் கற்றீர்கள். இது போதும் என்று நினைக்கிறேன்.

அடுத்து, Correlatives- அதாவது, 'இணைப்பு ஜோடிகள்' என்பது பற்றி சொல்லித் தர்றேன். இந்த ஜோடிகள், ஆங்கில மொழியில் சொற்களின் இணைப்புகளாக பயன்படுகிறது. இவற்றின் உபயோகம் சரியாக இல்லாவிட்டால், இதன் வாக்கிய அமைப்பு தவறாகிவிடும்.

இந்த ஜோடிகளை நன்கு மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள்.

1. Neither - nor

Neither vinitha nor his sister play in this ground.

வினிதாவோ அல்லது அவளுடைய சகோதரியோ இந்த மைதானத்தில் விளையாடுவதில்லை.

2. Not only - But also

I read not only english but also hindi.

ஆங்கிலம் மட்டுமல்ல, நான் இந்தியும் படிக்கிறேன்.

3.Too - to

He is too weak to walk.

அவன் நடக்க முடியாத அளவுக்கு பலவீனமாக உள்ளான்.

4. Either - or

Either you or your sister is guilty.

நீயோ அல்லது உன் சகோதரியோ தான் குற்றவாளியாகும்.

5.Rather - than

He would rather fail than copy.

அவன் பெயில் ஆனாலும் ஆவானே தவிர, காப்பியடிக்க மாட்டான்.

6.Although - yet

Although he is poor, yet he is honest.

அவன் ஏழையாக இருந்தாலும், நேர்மையானவன்.

இப்படி, ஜோடி ஜோடியாக இல்லாமல், ஒரே இடத்தில் இருந்து பொருள் தரும் வார்த்தைகளும் உள்ளன. அது, வலது பக்கம் வருமா, இடது பக்கம் வருமா என்பதை தருகிறேன். அதே போல் பயன்படுத்தி அசத்துங்கள். சரியா?

As soon as, Unless, As far as இவை வாக்கியத்தின் முதலில் வரும். Until, Till, So that இவை வாக்கியத்தின் இடையில் வரும். உதாரணம்.

As soon as we reached the bus stop, the bus left.

இந்த இடத்தில் as soon as என்ற வார்த்தை தனியாகவே நின்று பொருள் தருகிறது. இதற்கு தொடர்பான சொல் எதுவும் வாக்கியத்தில் இல்லை. இவற்றை சிங்கிளாகவே பயன்படுத்துங்கள்.

1. As soon as we reached the hospital, the doctor left.

நாங்கள் மருத்துவமனையை அடைந்த உடனே, மருத்துவர் சென்றுவிட்டார்.

2. Please wait for me, till I return.

நான் திரும்பி வரும்வரை, தயவு செய்து காத்திருக்கவும்.

3. Unless you run fast, you will miss the bus.

நீ வேகமாக ஓடினாலன்றி, வண்டியை பிடிக்க முடியாது.

4. As long as I am here, you need not worry about anything.

நான் இங்கு இருக்கும்வரை, உங்களுக்கு எந்த கவலையும் இல்லை.

இதுபோதும் என்று நினைக்கிறேன். எழுதிப் பழகுங்கள்!

Until then,

by Varshitha.






      Dinamalar
      Follow us