தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/கடிதம் எழுதலாமா...

கடிதம் எழுதலாமா...

கடிதம் எழுதலாமா...


PUBLISHED ON : ஜூன் 21, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 21, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கயஸ் என்ற மன்னன், ஜூகாட் நாட்டை ஆண்டு வந்தான். அங்கு, ஒரு ஏழைச் சிறுவன் இருந்தான்; திடீரென, அவனது தாய், நோயால், படுத்த படுக்கையானாள்! தாய்க்கு மருந்து வாங்கி கொடுக்க, அவனிடம் பணம் இல்லை.

யாரிடம் கேட்பது என்று, சிறுவனுக்குத் தெரியவில்லை. ஒரு யோசனைத் தோன்றியது...

'மன்னருக்கு கடிதம் எழுதி, உதவி கேட்டால் என்ன' என்று நினைத்தான். இந்த விஷயத்தை, தாயிடம் கூறினான்.

அதைக் கேட்டு, மனதில், பயம் ஏற்பட்டு உடல் நடுங்கியபடி, 'ஐயோ... மன்னரா... அவருக்கு நீ கடிதம் எழுதலாமா...' என்றாள், தாய்.

'எழுதினால் என்ன... நமக்கு, அவர் தானே கடவுள்; நம்மைக் காப்பாற்ற வேண்டியது, அவரது கடமை தானே! அதனால், அவருக்கு எழுதத் தான் போகிறேன்...' என்றான், சிறுவன்.

கடிதம் எழுதினான்; கடிதத்தில், எழுத்துப் பிழைகள் இருந்தன; நல்ல பேனா இல்லாததால், ஆங்காங்கே, மை சிதறிக் கிடந்தது.

அடுத்த நாளே, சிறுவனின் தைரியத்தை மெச்சி, தம்மை பார்க்க வரும்படி, மன்னரிடம் இருந்து, அழைப்பு வந்தது.

மன்னரைச் சந்திக்கச் சென்றான் சிறுவன். அங்கிருந்த அதிகாரிகள், மன்னரின் செயலைப் பார்த்து ஆச்சரியப்பட்டனர்; அரண்மனைக்குள், சிறுவனை அனுமதித்தனர்.

சிறுவனைக் கண்டதும், பையிலிருந்து, இரண்டு தங்க நாணயங்களை கொடுத்தார் மன்னர்.

அதை வாங்கிய சிறுவன், தைரியமாக, 'ஐயா... நான் கேட்டது, மூன்றரை தங்க நாணயங்கள். தாங்கள் கொடுத்திருப்பது, இரண்டு தங்க நாணயங்கள். இது மருந்து வாங்கப் போதாதே...' என்றான்.

'பார்த்தாயா... மறந்து விட்டேன்...' என்று கூறிய மன்னர், மேலும், இரண்டு தங்க நாணயங்களை, சிறுவனிடம் கொடுத்தார்.

அதை வாங்கியவன், 'ஐயா... மொத்தம், நான்கு தங்க நாணயங்கள் கொடுத்திருக்கிறீர்கள். எனக்கு வேண்டியது, மூன்றரை தங்க நாணயங்கள். மீதி சில்லரையை, நாளை கொடுக்கிறேன்...' என்றான்.

'சரி... நாளை வா...' என்று கூறினார் மன்னர்.

அடுத்த நாள், சிறுவன், மீதி நாணயத்துடன், மன்னரைப் பார்க்க வந்தான்.

அவன் தைரியத்தையும், நேர்மையையும் மெச்சி, அரண்மனையிலேயே வேலை கொடுத்த மன்னர், அவனது குடும்ப வறுமையை போக்கினார்.

குட்டீஸ்... நேர்மையாக இருப்பவர்களுக்கு உயர்வு தானே தேடி வரும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us