தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/சின்சிலா!

சின்சிலா!

சின்சிலா!


PUBLISHED ON : ஜூன் 26, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 26, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கொறித்துத் தின்னும் ஒரு குட்டிப்பிராணி. அதன் உடலோ பட்டுப் போல மிருதுவாக இருக்கும். இதனுடைய இத்தகைய நேர்த்தி யான தோலுக்காகவே இப்பிராணி ஏராளமாகக் கொல்லப்படுகிறது.

சின்சிலா ஒரு துரதிர்ஷ்டமுடைய பிராணி. பாவம்! இதன் பட்டுப் போன்ற வழவழப்பான தோலினால் மென்மயிர் அங்கிகள் (பர் கோட்ஸ்) தயாரிக்கப் படுகின்றன.

இந்த இனப்பிராணி யில் பல்வேறு வகை சில்லி, பொலிவியா, பெரு ஆகிய நாடுகளில் பெருமளவில் அழிந்து விட்டன. ஆகவே, இதைப் பாதுகாக்க அரசுகள் சட்டமியற்றி உள்ளன. ஐக்கிய அமெரிக்காவில் சின்சிலா வின் ரோமத்தோலி லிருந்து மேலங்கிகள் (கோட்ஸ்) தயாரிப்பதற் கென்றே, இப்பிராணி களை வளர்த்துப் பராமரிக்க (பிறகு கொல்ல) சின்சிலாப் பண்ணைகள் நிறுவி, இவற்றைப் பலுகிப் பெருகச் செய்து வருகின்றனர்.

இந்த இனப் பிராணியில் ராயல் சின்சிலா (ராஜாங்க சின்சிலா) என்று ஒருவகை. இவ் வகை, பெருநாட்டின் ஆண்டஸ் மலைப்பகுதி யில் வாழ்கின்றன. இதன் மென்தோல் மிகவும் விலை யுயர்ந்தது. இந்த ராயல் சின்சிலா பதினான்கு அங்குல நீளமிருக்கும். (வாலையும் சேர்த்து.) இதன் உடல் ரோமம் (பர்) நீளமானது; மிருவானது, நீலச் சாம்பல் நிறமுடையது.

பல வருடங்களுக்கு முன், பெருநாட்டுச் சுதேசிகள், சின்சிலாவை வேட்டையாட, வீசல் என்ற பிராணியைப் பழக்கி வந்தனர். இன்று ராயல் சின்சிலா இனமே கிடையாது. சில ஆண்டு களுக்கு முன் ஒரு ராயல் சின்சிலாவின் மென் மயிர்த்தோல் 2000 பவுனுக்கு விலை போயிற்று.

இந்தப் பிராணி ரொம்பவும் கூச்ச கூபாவமுடையது. வெகுவேகமாகக் குடு குடுவென்று ஓடும் சின்னப் பிராணி. அபாயம் என்று அறிந்த துமே, தன் பதுங்கு குழிக்கோ அல்லது பாறைகளினிடையேயுள்ள குழிகளை நோக்கியோ பாய்ந்து ஓடும். இது மிகவும் ஆர்வமுள்ள பிராணி. ஓடி ஒளிந்து கொண்டதும், தன்னைப் பீதியடைச் செய்தது எது, என்ன என்பதைக் காணத் தலையைத் தூக்கி நோட்டமிடும்.

பகலின் வெப்பத்திலும், மலைப்பகுதியின் நிழல் சாய்ந்த பொட்டலிலும், மலைப்பகுதி களிலும் வளைய வரும். சூரியன் மறையத் தொடங்கும்வரை இவ்வாறு இரைதேடும். தானியம், விதைகள், பழங்கள், புல் பாசி ஆகியவையே இதன் உணவு.

அணிலைப் போல பின் கால் களில் அமர்ந்து உணவை முன் கால்களில் அணைத்துப் பிடித்துக் கொண்டு கொறிக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us