
தேவைப்படும் பொருட்கள்: சதுர வடிவ களிமண் பூந்தொட்டி, லேவண்டர் ப்ளூ, மஞ்சள், ஆரஞ்சு கலர், 'அக்ரிலிக் பெயின்ட்,' சிறிய மற்றும் பெரிய பெயின்ட் பிரஷ்கள். பெரிய பூ வடிவில் ரப்பர் ஸ்டாம்ப் ஒன்று தயார் செய்து கொள்ளவும்.
செய்முறை:
1.பெரிய பிரஷால் லேவண்டர் ப்ளூ கலரில் மண் தொட்டியின் வெளிப்புறத்திலும், உட்புறம் மேல் பகுதியிலும் அழகாக பெயின்ட் செய்யவும்.
(கீழ் பகுதியில் மண் போட வேண்டியிருப்பதால் அங்கு பெயின்ட் செய்யத் தேவையில்லை)
2.பிறகு ஒரு மீடியம் பிரஷை எடுத்து பூ வடிவ ரப்பர் ஸ்டாம்பின் மீது பெயின்டை மிதமாக பூசுங்கள்.
3.இந்த ரப்பர் ஸ்டாம்பை பூந்தொட்டியின் பக்கவாட்டு பகுதிகளில் நன்றாக பதிக்கவும்.
4.பிறகு சிறிய பிரஷை எடுத்து ஆரஞ்சு கலர் பெயின்டால் பூவின் நடுவில் புள்ளிகள் வைத்து அழகு படுத்தி காய வையுங்கள்.
இந்த கலர்புல் பூந்தொட்டியில், பூச்செடிகளை வைத்து மேலும் அழகுபடுத்துங்கள்.