sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

அர்ப்பணிப்பு!

/

அர்ப்பணிப்பு!

அர்ப்பணிப்பு!

அர்ப்பணிப்பு!


PUBLISHED ON : பிப் 11, 2023

Google News

PUBLISHED ON : பிப் 11, 2023


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெய்வேலி, நிலக்கரி நிறுவன க்ளூனி பள்ளியில், 1982ல், 10ம் வகுப்பு படித்தேன். தலைமை ஆசிரியராக இருந்த சிஸ்டர் பெஞ்சமின், கண்டிப்பு நிறைந்தவர்; பொது தேர்வுக்காக இரவு, 8:30 மணி வரை பள்ளியில், சிறப்பு வகுப்பு நடத்துவார்.

அப்போது உடன் இருந்து கேள்விகள் கேட்டு பரிசளித்து உற்சாகப்படுத்துவார். வகுப்பு முடிந்து இரவில் பெற்றோர் அழைத்து செல்லும் வரை கனிவுடன் கவனித்து பாதுகாப்பார்.

சேட்டை செய்வோரை முதலில் அன்பாகவும், திருந்தாவிட்டால் தண்டனை கொடுத்தும் வழிக்கு கொண்டு வருவார். விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் தருவார். மகிழ்வுடன் சுற்றுலா அழைத்துச் செல்வார். அப்போது, மாணவியருடன் மாணவியாக மாறி, பாட்டு, நடனம் என ஆடி குதுாகலிப்பார்.

புத்தகப் புழுவாக இருக்காமல், நடப்பு உலகுடன் வாழ பயிற்சி அளித்தார். நேரம் தவறாமை, உடைமை பாதுகாப்பு, நட்பை வளர்த்தல், சிக்கனம் போன்றவற்றையும் கற்பித்து, சிறப்பாக வாழ வழிகாட்டினார்.

தற்போது, 54 வயதாகிறது; மத்திய கிழக்கு நாடான ஐக்கிய அரபு அமீரகம், துபாய், தனியார் வங்கியில் நேர்மையாக பணிபுரிகிறேன். இதற்கு அந்த தலைமை ஆசிரியையிடம் பெற்ற பயிற்சி உதவுகிறது. கல்விக்காக வாழ்வை அர்பணித்தவரின் நினைவை மனதில் ஏந்தியுள்ளேன்.

- பிரியா ராஜசேஷன், துபாய்.

தொடர்புக்கு: 94443 81298







      Dinamalar
      Follow us