தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/கூல்... கூல்...

கூல்... கூல்...

கூல்... கூல்...


PUBLISHED ON : மே 11, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 11, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோடைக் காலத்தில், உடலில், வறட்சி ஏற்படுவதால், அடிக்கடி தாகம் எடுக்கும். உடலில் உள்ள நீர் வியர்வையாக வெளியேறி விடுவதே காரணம்.

வெள்ளரிக்காயும், மோரும், உடலில் நீண்ட நேரத்துக்கு, வறட்சி ஏற்படாமல் பாதுகாக்கும். எனவே, வீட்டிலிருந்து புறப்படும் போது, இவற்றில் ஏதேனும் ஒன்றை சாப்பிட்டு புறப்படுங்கள்.

கோடை காலத்துக்கு ஏற்ற அடுத்த உணவு, தர்ப்பூசணி. இதில், 90 சதவீதம் தண்ணீரும், எட்டு சதவீதம் சர்க்கரையும் இருப்பதால், உடலில், வறட்சி ஏற்படாமல் தடுக்கிறது.

இளநீர் என்பது, 7 முதல் 8 மாதம் வரை உள்ள தேங்காய். உடல் சூட்டை தணிக்க இளநீர் அருந்தலாம். வயிற்றுப்போக்கு, வாந்தி, மஞ்சள் காமாலை உள்ளவர்கள் அதிகமாக உட்கொள்ள வேண்டும். ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்த, நோயாளிகளுக்கு, 'குளுகோஸ்' ஏற்றுவதற்கு பதிலாக, நரம்பு மூலம், இளநீரை செலுத்துவர்; அவ்வளவு சிறப்பானது.

இளநீரில், புரதம், 0.1 சதவிதம், கொழுப்பு, 0.1 சதவிதம், மாவு சத்து, 4 சதவிதமும் உள்ளன. இதன் புரதத்தில், அலனின், ஆர்ஜினைன், சிஸ்டைன் போன்ற அமினோ அமிலங்களின் அளவு, பசும்பாலில் உள்ளதை விட அதிகம் உள்ளன.

எனவே, இவற்றை சாப்பிட்டு உடம்பை, 'கூல் கூல்'ஆ வச்சிக்கோங்க!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us