தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/செம்புள்ளியும், கரும்புள்ளியும்!

செம்புள்ளியும், கரும்புள்ளியும்!

செம்புள்ளியும், கரும்புள்ளியும்!


PUBLISHED ON : ஜூலை 01, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 01, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சூரியனில் அடிப்படையாகவே பல கரும்புள்ளிகள் உள்ளன. இதைப் பார்த்தவர் எவரேனும் உண்டா? சாதாரணமாக, சூரியனை கண்களால் நேரடியாகப் பார்க்க இயலுவதில்லை. இந்த நிலையில் கரும்புள்ளிகள் எங்கே காண்பது, எப்படித்தான் எண்ணுவது என்கிறீர்கள் அல்லவா? நல்ல கெட்டியான ஒரு அட்டையில் மிகச் சிறிய துளை ஒன்றினைச் செய்து அதன் மூலம் சூரியனைக் கவனித்தால் இச்சிறு புள்ளிகளில் புலப்படும். நிழல் போலக் கறுப்பாகத் தெரியும் இப்புள்ளிகள் சூரியனின் குளிர்ச்சி மிகுந்த பகுதிகளைக் குறிப்படுபவை ஆகும்.

இயல்பான சூரியனின் வெப்பம் 4600 டு அளவுகள் எனக் குறிப்படப்படுகின்றன. அவ்வாறென்றால் இப்புள்ளிப் பகுதிகள் 3700டு அல்லது அதற்கு கீழாக இருப்பதுண்டு என்கின்றனர். இச்சூரியப் புள்ளிகளை 1611-ஆம் ஆண்டு இத்தாலிய நாட்டு விஞ்ஞானி கலிலியோ கண்டறிந்தார். சூரியனைப்போல சந்திரனிலும் குளிர்ந்த மலைப் பகுதிகள்தான் ஒரு நிழல் போலத் தெரிகின்றன என்கின்றனர். இதனையே அழகிய முழுமதியில் களங்கம் என்கின்றனர் நம் புலவர்கள். சந்திரனை ராகு விழுங்கியதன் அடையாளம் என்கின்றனர் ஜோதிட நூலார். நிலாவில் குடியிருக்கும் கூனிக்கிழவி எனக் குறிப்பட்டு தன் கைக்குழந்தைக்கு உணவூட்டுகிறாள் அன்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us