தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/ஒழுக்கமே ஆயுதம்!

ஒழுக்கமே ஆயுதம்!

ஒழுக்கமே ஆயுதம்!


PUBLISHED ON : நவ 14, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 14, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிவகங்கை மாவட்டம், திருப்புத்துார், கண்டரமாணிக்கம், ஸ்ரீ தண்டாயுதபாணி துவக்கப் பள்ளியில், 1966ல், 2ம் வகுப்பு சேர்ந்தேன்; 5ம் வகுப்பு வரை அங்கேயே படித்தேன்.

தலைமை ஆசிரியர் மு.கண்ணுச்சாமி பாசமும், பற்றும் மிக்கவர். பாடங்கள் கற்பிப்பதில் வல்லவர். ஒருவரைக் கூட அடித்தோ, அதட்டியோ பார்த்ததில்லை. கண் ஜாடைக் காட்டியே மாணவர்களை திருத்துவார். மாற்றுத்திறனாளியான என் மீது தனி கவனம் செலுத்தினார்; பரிவுடன் நடந்து கொண்டார்.

அவரது மகன் முத்தழகனும் உடன் படித்தான். சிறப்பு சலுகை எதையும் அவனுக்கு வழங்கியதில்லை. எல்லா செயலிலும் ஒழுக்கத்தை வலியுறுத்துவார்.

அதுதான் வாழ்வை மேன்மைப் படுத்தும் ஆயுதம் என்று அறிவுரைப்பார். அவரிடம் பயின்ற நாட்களை நற்பேறாக கருதுகிறேன்.

தற்போது, என் வயது 62; அந்த தலைமை ஆசிரியர் கற்றுத்தந்த ஒழுக்கத்தால் சிறப்புடன் வாழ்கிறேன். அவரது நினைவு பூரிக்க வைக்கிறது.

- சே.மாணிக்கம், சிவகங்கை.

தொடர்புக்கு: 96558 62522


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us