தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/வாயை திறக்காதீங்க!

வாயை திறக்காதீங்க!

வாயை திறக்காதீங்க!


PUBLISHED ON : டிச 21, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 21, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தர்மபுரி, அதியமான் உயர்நிலைப் பள்ளியில், 1974ல், 10ம் வகுப்பு படித்த போது, தமிழாசிரியராக திருநாவுக்கரசு இருந்தார். மிகவும் கண்டிப்பானவர்; இலக்கிய சுவையுடன் பாடங்களை நடத்துவார்.

ஒரு நாள், 'தலைமையாசிரியர் வகுப்புக்கு வர உள்ளார்; அவர் எது கூறினாலும், சரி என்று தலையாட்டணும்; வாயை திறக்க கூடாது...' என்றார்.

சொன்னது போலவே வந்த தலைமையாசிரியர், 'மாணவர்களே... என் பிறந்தநாளில், சாக்லெட் எடுத்து வந்திருக்கிறேன்; ஒவ்வொருவராக வந்து வாங்கிக் கொள்ளுங்க...' என்றார்.

வரிசையில் சென்று வாங்கி, சாப்பிடாமல் கையில் வைத்திருந்தோம்.

சாப்பிட வலியுறுத்திய தலைமையாசிரியரிடம், 'வாயை திறக்க கூடாதுன்னு, ஆசிரியர் சொல்லிட்டார்...' என்றான் ஒரு மாணவன்.

அவர் விழுந்து விழுந்து சிரித்தார். அனைவரும் அந்த குதுாகலத்தில் பங்கேற்றோம். இன்றும், அந்த நிகழ்வு மனதில் பசுமையாக உள்ளது.

- தீ.அசோகன், சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us