PUBLISHED ON : ஜன 22, 2016

1. நம் உடலில் உள்ள சுரப்பிகளில் மிகப் பெரியது எது?
கல்லீரல்
2. நமது முதுகெலும்பில் உள்ள எலும்புகள் மொத்தம் எத்தனை?
33
3. நம் உடலிலுள்ள ஒரு உறுப்பினால் எவ்விதப் பயனும் இல்லை. ஆனால், அது பாதிக்கப் படுமானால், நம் உயிருக்கே ஆபத்து. அது எந்த உறுப்பு?
குடல்வால்
4. எந்த வைட்டமின் குறைவினால் மலட்டுத் தன்மை ஏற்படுகிறது?
வைட்டமின் ஈ
5. 'டிப்தீரியா' என்னும் நோய், மூக்கு, குடல், தோல், தொண்டை இவற்றில் எதை பாதிக்கிறது?
தொண்டையை
6. 'ஆண்டிபயாடிக்' மருந்து என்பது என்ன?
நோய்க் கிருமிகளை கொல்லும் மருந்து
7. நடுத்தர வயது மனிதனின் நாடித்துடிப்பு நிமிடத்துக்கு எவ்வளவு?
72 முறை
8. கல்லீரலில் சேமித்து வைக்கப் படும் சத்து எது?
சர்க்கரை
9. 'ஆக்ஸிஜன் படகு' என்று நம் உடலிலுள்ள எதைக் குறிப்பிடுகின்றனர்?
ரத்தத்திலுள்ள ஹீமோ குளோபினை
10. வெங்காயத்தில் நிறைந்துள்ள உயிர்ச்சத்து எது?
வைட்டமின் பி
11. எலும்புகளைத் தாக்கும், 'ரிக்கெட்ஸ்' என்னும் நோய், எந்த உயிர்ச்சத்துக் குறைவினால் தோன்றுகிறது?
வைட்டமின் டி
