தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/டிசைன் டிசைனா அழிக்கிறாங்கப்பா!

டிசைன் டிசைனா அழிக்கிறாங்கப்பா!

டிசைன் டிசைனா அழிக்கிறாங்கப்பா!


PUBLISHED ON : மார் 11, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 11, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அடிப்படை ஆதாரங்கள்

மனிதனால் உருவாக்கப் படும் பெரும்பான்மையான மாசுப்படுத்தும் காரணிகள் பெரிய தொழிற்சாலை, போக்குவரத்து மற்றும் மின்சார தயாரிப்பு ஆகியவற்றிலிருந்து வெளிப்படுகிறது.

மாசுப்படுதலால் நமக்கு கிடைக்கும் தீமைகள். அமில மழை, வெப்பமயமாகுதல் மற்றும் ஓசோன் குறைவு ஆகியவைகளும் அடக்கம்.

மாசுப்படுதலால் ஏற்படும் தீமைகளை மாசுப்படுத்தலை தவிர்ப்பதால் அல்லது குறைப்பதால் மட்டுமே, கட்டுப்படுத்த முடியும். உதாரணத்திற்கு காற்றில் இருக்கும் கார்பன்-டை-ஆக்ஸைடு காலம் காலமாக தாவரங்களால் அகற்றப்படுகிறது.

புவி வெப்பமயமாதல்!

புதைத்து போன பொருள்களின் படிமங்களை எரிப்பதனால், அமில மழை ஏற்படும். இப்பொது அப்படி எரிப்பதால் நிகழும் மிகப்பெரிய அபாயம் பற்றியும் கவலைப்பட வேண்டி உள்ளது. அதுதான் புவி வெப்பமயமாகுதல். இதில் பெறப்படும் கார்பன்-டை-ஆக்ஸைடு வாயு மண்டலத்தில் சூரியனின் தாக்கத்தை அதிகப்படுத்துகிறது. இந்த கார்பன் டை-ஆக்ஸைடை வாயு மண்டலத்திலிருந்து நீக்கும் வேலையை தாவரங்கள் செய்கிறது. ஆனால், காடுகளை அழித்தல் மூலம் தாவரங்களின் வேலை தடைப்படுகிறது. கார்பன்-டை ஆக்ஸைடு தான் புவி வெப்பமய மாகுதலுக்கு மிகப்பெரிய காரணம் என்றாலும் அது மட்டுமே முழு காரணமும் அல்ல. அடுத்த கட்ட மோச விளைவுகளை தரும் வாயுக்கள் மோட்டர் வாகனங்களிலிருந்து வெளியேறும் நைட்ரஜன் டையாக்ஸைடு மற்றும் மீத்தேன் ஆகும். மேலும், புவி வெப்பமய மாகுதலின் பெரும் தீய விளைவுகள் மாறும் கடும் வெப்ப சூழல் மற்றும் உயரும் கடல் மட்ட அளவுகளாகும்.

பொதுவாக மாசுபடுத்தும் காரணிகள்

பெரும்பான்மையான மாசுப்படுத்து காரணிகள் கண்களுக்கு புலம்படாத வாயுக்கள் தான். அதோடு, அந்த வாயுக்கள் நம்மை சுற்றி நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ளகாரணிகள் அதிகமாக காணப்படும் நேரங்களில் நம் உடல்நலம் பாதிப்பு அடையும். அதோடு அக்காரணிகள் இயற்கையை அழிக்கும் மிக பயங்கர விளைவையும் ஏற்படுத்தும்.

மாசுப்படுத்தும் காரணிகளுக்கு ஆதாரம், சுற்றுச்சூழல் பிரச்னை, கார்பன்-டை-ஆக்ஸைடு, க்ளோரோஃபளோரோ கார்பன்கள், மீத்தேன், நைட்ரஜன் ஆக்ஸைடுகள், சல்பர் டையாக்ஸைடு, புதைந்த பொருள்கள் எரித்தல், புவி வெப்பமயமாதல், விண் ஊர்திகள், பிரிட்ஜ் மற்றும் ஏ.சி.,க்கள்.

ஒசோன் குறைபாடு மற்றும் ஓசோனின் குறைபாடு மற்றும் புவி வெப்பமயமாதல், மோட்டர் வண்டிகள், அமில மழை மற்றும் புவி வெப்பமயதால்.(DDT) பூச்சிக்கொல்லி மருந்து

(DDT) பூச்சிக்கொல்லி மருந்து

அதிசய பூச்சிக்கொல்லி என 1939-ம் வருடம் DDT உருவாக்கப்பட்ட போது அழைக்கப்பட்டது. பின்னர் அதுவே சுற்றுச்சூழலுக்கு அரக்கனானது. இப்பூச்சிக்கொல்லி மெதுமெதுவாய் உணவுச்சங்கிலியை அடைந்து வீரியமடைகிறது. அதை உண்ணும் பெரிய பறவைகளுக்கு இரையாகும் சிறிய பறவைகள், தீமையேற்படுத்தும் ஓடுகளுடன் சத்து இல்லாத முட்டைகளை போடுகிறது. குட்டி பறவைகளின் எண்ணிக்கையும் பூமியில் உள்ள பூச்சிகளின் அழிப்பால் உண்ண உணவின்றி குறைந்து விடுகிறது.

ஓசோன் ஓட்டை!

சூரியனிலிருந்து புறப்படும் புற ஊதா கதிர்களின் வீச்சிலிருந்து நம்மை காப்பது ஓசோன் அடுக்கு புற ஊதா கதிர்கள். உயிரணுக்களை அழித்து விடுவதோடு, கேன்சர் ஏற்படவும் பெரும் காரணமாகிறது. சமீபத்திய நூற்றாண்டுகளில் ஓசோன் அடுக்கு தன் உருவில் மெலிவும் ஓட்டையும் அடைந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம். வாயுமண்டலத்தில் கலக்கும் நச்சு க்ளோரோ ப்ளோரோ கார்பன்கள் இவை ஓசோனோடு சண்டையிட்டு அதை சிதைவு அடைய செய்கிறது.

மாசுப்படுவதால் வரும் தீய விளைவுகள்!

வேளாண்மையால் மாசுப்படுதல். அதிகப்படியான உரம், பூச்சிக்கொல்லி மற்றும் தேவையற்ற பயிர்களை அகற்றும் மருந்துகள் ஆகியவை அந்த பகுதி சுற்றுச்சூழலில் தீய விளைவை ஏற்படுத்துகிறது. இதுபோன்ற வீரியமிக்க மருந்துகள் தண்ணீர் நிலைகளான ஏரி, நதி ஆகியவைகளை அடையும்போது அங்கே இருக்கும் பயிர்களையும் பாதிப்படைய செய்கிறது. அந்த பயிர்களை உண்டு வாழும் உயிர்களும் இதன் மூலம் பாதிப்பு அடைகிறது.

தேவையற்ற பயிர்களை அழிக்கும் மருந்து களும், பூச்சிக்கொல்லிகளும் நன்னீர் உயிரிகளை உடனே அழிக்கிறது. இதே போன்ற விளைவைதான் இந்த மருந்துகளோடு தொடர்பு ஏற்படுத்தி கொள்ளும். தாவரங்களுக்கும், விலங்குகளுக்கும் இந்த மருந்துகள் தருகின்றன. பயிர் தெளிப்பான்கள், பூச்சிக்கொல்லி மற்றும் தேவையற்ற பயிர் கொல்லிகளும் கொண்ட மருந்துகள் இதுபோல தெளிக்கப்படுவதால் உணவு சங்கிலியின் ஆதாரத்தையே மண்ணிலிருந்து அழித்து விடுகிறது.

எண்ணெய் கசிவுகள்!

தினமும் ஏராளமான எண்ணெய் நீர் பரப்பினூடே எடுத்து செல்லப்படுகிறது. பெரும்பாலான பயணங்கள் நல்லவிதமாக முடிந்தாலும் சில பயணங்கள் மோசமாய் முடிகின்றன. எண்ணெய் கசிவுகள் கடல் வாழ் தாவரங்கள், விலங்குகள் மற்றும் கடலோர பகுதிகள் ஆகியவைற்றை பெரிதாக பாதிக்கின்றன

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us