sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/குள்ளா.... குள்ளா! (2)

குள்ளா.... குள்ளா! (2)

குள்ளா.... குள்ளா! (2)


PUBLISHED ON : ஜூன் 21, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 21, 2013


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரண்மனைக்கு சென்ற பொன்னன் அரசரை வணங்கினான்.

''என்னால் இளவரசியைக் கண்டுபிடிக்க முடியும். அவர் எங்கே மூழ்கினார் என்று காட்ட சொல்லுங்கள்,'' என்றான்.

''உன்னைப் போல எத்தனையோ பேர் இளவரசியைக் கண்டுபிடிக்க முயற்சி செய்தனர். யாராலும் முடிய வில்லை. நாளை இங்கே வா. இளவரசி மூழ்கிய இடத்தை வீரர்கள் உனக்குக் காட்டுவர். நீயும் முயற்சி செய்து பார்,'' என்று சலிப்புடன் சொன்னான் அரசன்.

விடுதி ஒன்றில் அன்றிரவு தங்கினான் பொன்னன்.

அவன் காதில் குள்ளன், ''இளவரசி மூழ்கிய இடத்தில் முழங்கால் அளவு தண்ணீர்தான் உள்ளது. அங்குள்ள பாறைகளுக்கு இடையே கீழே செல்ல வழி இருக்க வேண்டும். மூன்று நண்டுகளை உயிருடன் எடுத்துச் செல். ஒவ்வொரு நண்டாக அங்கே விடு. அவை எங்கே செல்கின்றன என்று கவனி. அதன்பிறகு என்ன செய்ய வேண்டும் என்று நான் சொல்கிறேன்,'' என்றான்.

ˆபடிழுது விடிந்தது. நண்டுகள் மூன்றைப் பிடித்த அவன் தன் பைக்குள் வைத்துக் கொண்டான். வீரர்கள் அவனை ஆற்றங் கரைக்கு அழைத்துச் சென்றனர்.

''இந்த இடத்தில்தான் இளவரசி மூழ்கினார். அவருக்கு என்ன ஆனதோ தெரியவில்லை,'' என்று ஓர் இடத்தைக் காட்டினான் வீரன் ஒருவன்.

அங்கே தண்ணீரின் ஆழத்தைப் பார்ப்பது போல முதல் நண்டை விட்டான் பொன்னன். அந்த நண்டு அங்கிருந்து பாறையின் அடியில் சென்று மறைந்தது. இன்னொரு நண்டையும் விட்டான். அதுவும் அங்கேயே சென்று மறைந்தது.

அவன் காதில் குள்ளன், ''மூன்றாவது நண்டையும் விடு, அதுவும் மற்ற நண்டு களைப் போலப் பாறைக்குள் அடியில் செல்லும். அங்கே கண்டிப்பாக வழி இருக்க வேண்டும். அந்த வழிக்குள் செல்ல முயற்சி செய்,'' என்றான்.

மூன்றாவது நண்டையும் விட்டான் அவன். அது மறைந்த இடத்தில் வழி ஒன்று இருந்தது. தலை மட்டும் <உள்ளே நுழையும் அளவு சிறிய வழியாக இருந்தது. அதற்குள் முயன்று, உள்ளே சென்றான் பொன்னன். போகப் போக அந்த வழி பெரிதாகிக் கொண்டே வந்தது.

நீண்ட நேரம் சென்று கொண்டே இருந்தான். அவன் கண்களுக்கு அழகான மாளிகை ஒன்று தெரிந்தது.

''அது கடல் கன்னி வாழும் மாளிகை. தன்னை விட இளவரசி அழகாக இருக்கிறாள் என்ற பொறாமை அவளுக்கு. அதனால் தான் இளவரசியைத் தூக்கிச் சென்றுள்ளாள்.

அந்த மாளிகையை இரண்டு கரடிகள் காவல் காக்கின்றன. அவை மிகவும் வலிமை வாய்ந்தவை. உன்னைப் பார்த் தால் அடுத்த நொடியே கொன்று விடும்,'' என்றான் குள்ளன்.

''கரடிகளிடமிருந்து தப்ப நான் என்ன செய்வது?'' என்றான் பொன்னன்.

''கரடிகளைப் பார்த்தவுடன் உன் தொப்பியை அவற்றின் முன் போடு. ஏராளமான தேன் வர வேண்டும் என்று சொல். தொப்பிக்குள் தேனைப் பார்த்ததும் கரடிகள் உன்னை மறந்துவிடும். தேனைச் சாப்பிடத் தொடங்கும். அவை சாப்பிட்டு முடிப்பதற் குள் இளவரசியை மீட்டு வந்து விடலாம்,'' என்றான் குள்ளன்.

அந்த மாளிகையை நெருங்கினான் பொன்னன். அங்கே காவல் இருந்த கரடிகள் அவனை நோக்கி ஓடி வந்தன. அவற்றின் முன் தன் தொப்பியை எறிந்தான் பொன்னன்.

''நிறைய தேன் வர வேண்டும்,'' என்றான்.

அந்த தொப்பியில் நிறைய தேன் வந்தது. அந்த கரடிகள் தேனைப் பார்த்து, மகிழ்ச்சியாக உண்ணத் தொடங்கின.

எந்தத் தடையும் இன்றி மாளிகைக்குள் நுழைந்தான் பொன்னன். அங்கே இரண்டு அறைகள் இருந்தன. ஒன்று தங்கத்தாலாகி இருந்தது. இன்னொன்று வெள்ளியாலாகி இருந்தது. தங்க அறைக்குள் நுழைய முயன்றான் பொன்னன்.

''உள்ளே நுழையாதே. அந்த அறைக்குள் கடல் கன்னி இருக்கிறாள். உன்னை அவள் பார்த்து விட்டால் போதும். வாழ்நாள் முழுமை யும் நீ அவளுக்கு அடிமையாக இருக்க வேண்டும். அந்த அறைக் கதவை மூடித் தாழ்ப்பாள் போடு. விரைந்து செயல்படு,'' என்ற குள்ளனின் குரல் கேட்டது.

உடனே அவன் அந்த அறைக் கதவை மூடி தாழ்ப்பாள் போட்டான். உள்ளே சிக்கிக் கொண்ட கடல் கன்னி பதறினாள். 'எப்படி யாவது அவனைக் கதவைத் திறக்க வைக்க வேண்டும்' என்று நினைத்தாள்.

''ஏன் கதவைத் தாழ்ப்பாள் போட்டாய். அழகியான என்னைப் பார்க்க உனக்கு விருப்பம் இல்லையா? இங்கே உனக்கு எல்லா இன்பங்களும் காத்திருக்கின்றன. நீ மகிழ்ச்சி யாக இருக்கலாம். கதவைத் திற,'' என்று மயக்கும் குரலில் கெஞ்சினாள் அவள்.

''கடல் கன்னியின் குரலைப் பொருட் படுத்தாதே, வெள்ளிக் கதவைத் திறந்து உள்ளே செல். அங்கே இளவரசி இருக்கிறாள்,'' என்றான் குள்ளன்.

வெள்ளிக் கதவைத் திறந்தான் பொன்னன். கட்டிலில் பேரழகி ஒருத்தி அழுது கொண்டிருந்தாள்.

அவளைப் பார்த்த அவன், ''இவள் அழகில் கடல் கன்னி பொறாமை கொண்டதில் வியப்பு இல்லை. அழுது புலம்பும் நிலையிலேயே பேரழகுடன் விளங்குகிறாளே,'' என்று மயங்கி நின்றான்.

''இளவரசியுடன் நீ உடனே வெளியே செல்ல வேண்டும். இல்லாவிட்டால் கரடிகளிடம் இருந்து தப்ப முடியாது,'' என்ற குள்ளனின் குரல் கேட்டது.

உணர்வு வரப் பெற்ற அவன், ''இளவரசியே! உங்களைக் காப்பாற்ற வந்துள்ளேன். உடனே புறப்படுங்கள். தாமதிக்க நேரம் இல்லை,'' என்று பரபரப்புடன் சொன்னான்.

அவனுடன் புறப்பட்டாள் இளவரசி. இருவரும் மாளிகைக்கு வெளியே ஓடி வந்தனர்.

தேன் குடிப்பதிலேயே கரடிகள் ஆர்வமாக இருந்தன. இளவரசி தப்பியதை அவை கவனிக்கவில்லை.

இருவரும் நீண்ட தொலைவு நீந்திப் பாறையின் அருகே வந்தனர்.

''தொப்பி உன்னிடம் வர வேண்டும் என்று நினை,'' என்றான் குள்ளன். பொன்னனும் அப்படியே நினைத்தான் தொப்பி அவனிடம் வந்தது.

தாங்கள் ஏமாந்து விட்டதை அறிந்த கரடிகள் பயங்கரமாக கத்தின.

அவனும், இளவரசியும் பாறை இடைவெளி வழியாக வெளியே வந்தனர். இளவரசி உயிருடன் வந்ததை அறிந்த மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பொன்னனைச் சிறப்புடன் வரவேற்றான் அரசன்.

''மாவீரனே! உன்னால் இளவரசி காப்பாற்றப்பட்டாள். உன் வீரத்திற்குப் பாராட்டுக்கள். நான் சொன்னது போலவே, உனக்கும் இளவரசிக்கும் விரைவில் திருமணம் நிகழும்,' என்றான்.

மகிழ்ச்சி அடைந்த பொன்னன் அரண்மனையில் தங்கினான்.

அவனிடம் குள்ளன், ''உனக்கு உலக அனுபவம் போதாது. என்னுடன் புறப்படு. நாம் பல நாடுகளையும் சுற்றி வருவோம். பிறகு இளவரசியைத் திருமணம் செய்து கொள்ளலாம்,'' என்றான்.

''நான் மகிழ்ச்சியாக வாழப் போவது உனக்குப் பிடிக்கவில்லையா?'' என்று கேட்டான் பொன்னன்.

-2 தொடரும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us