தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/ஏகாரவல்லி!

ஏகாரவல்லி!

ஏகாரவல்லி!


PUBLISHED ON : அக் 08, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 08, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முக்கனிகளில் ஒன்று பலா. இதை ஏகாரவல்லி என்றும் அழைப்பர்; சக்கை, பலாசம், வருக்கை என்ற பெயர்களும் உண்டு. இதன் பூர்வீகம் இந்தியா; பூமத்திய ரேகையை ஒட்டிய பகுதிகளில் அதிகமாக வளரும். ஆசிய நாடுகளான பர்மா, இலங்கை, பிலிப்பைன்ஸ், தென் அமெரிக்க நாடான பிரேசில் ஆப்ரிக்க நாடான கென்யாவில் அதிகம் பயிரிடப்படுகிறது.

பலா மரம் நடவு செய்த, ஏழு ஆண்டுகளில் பூக்கும். ஒரு மரத்தில் ஆண்டுக்கு, 150 பழங்கள் வரை கிடைக்கும். பலா பழத்தில், புரதம், கொழுப்பு, மாவு, நார், சுண்ணாம்பு, குளோரின், கந்தகம் உட்பட, 18 வகை சத்துக்கள் உள்ளன. வைட்டமின் - ஏ சத்தும் அதிகம்.

* பலாப் பழத்தைச் சாப்பிடுவதால் மூளைக்கு செல்லும் நரம்புகள் வலுப்பெறும்* பலா இலையை காய வைத்து, பொடி செய்து, தேனில் கலந்து சாப்பிட்டால் வயிற்றுப்புண் ஆறும்; வாயுத் தொல்லை நீங்கும்

* பலாச் சுளையை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால், ஜீரண சக்தி அதிகரிக்கும். சர்க்கரை நோய் உள்ளவர்கள், இந்த பழத்தை தவிர்க்க வேண்டும்.

- எஸ்.பிரபு ராஜா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us