PUBLISHED ON : ஜூலை 01, 2011

அமேசான் ஆற்றுப்பள்ளத்தாக்கின் பறவைகள் நன்கு செழித்த தாவர வளர்ச்சியினூடே வாழ்கின்றன.சில பறவைகள், 'சூரிய குளியல் குளிக்க விரும்பி' நாள் பூராவும் மர உச்சிகளில் இருக்கும்.
முப்பரிமான இந்த தனி தாவர உலகில் சில பறவைகள் தரையிலிருந்து சற்று மேலே உள்ள பரிமாணத்தில் வாழும்.சில பறவைகள் உச்சியிலும், சில நடுவிலும், சில தரையிலும் என வாழ இடம் தரும் வெகு அடர்ந்த தாவர வளர்ச்சி. பெரிய பறவைகள் சில தரையில் தான் தங்கள் இரையை தேடும். இரவினில் மரத்தில் உட்கார்ந்தப்படி இருக்கும். இப்படி செய்வதனால் எதிரிகளிடமிருந்து இவை தப்பித்து கொள்கின்றன. இதுபோல நிலத்தை சார்ந்த பறவைகளில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய பறவை டினாமஸ்.
இவை டினாமிடே இன பறவைகளின் ஒரு பிரிவாகும். தொன்மையான பறவை இனங்களில் ஒன்றாகும். உலகில் இப்பறவை தென் மற்றும் மத்திய அமெரிக்காவில் மட்டுமே காணப்படும். பறவை ஆராய்ச்சியாளர்கள் இந்த பறவைகள் ஈமு மற்றும் நெருப்பு கோழி பறவைகளுக்கு மத்திய வகை என குறிப்பிடுகின்றனர்.
இந்த டினாமஸ் பறவை எந்த வகையான சூழலிலும் பருவ நிலையிலும் வாழும்; பாலைவனத்திலும் கூட வாழும். அமேசான் ஆற்றுப்பள்ளத்தாக்கு பகுதியில் எக்கசக்கமான வகை பறவைகள் வாழ்கின்றன. அது போன்ற பறவைகளின் சைஸ் மிகச் சிறிய கவுதாரி பறவை முதல் சேவல் வரை இருக்கும். இவைகளின் இறகுகளின் தொகுதி, பழுப்பு, க்ரீம் மற்றும் கருப்பு வண்ணத்தில் இருக்கும். இவைகளில் பட்டுபோன இலைகள் மற்றும் புதர்களின் ஊடே பழங்கள், விதைகள் மற்றும் பெரிய பூச்சிகளை தேடி நகரும்.
இவைகளின் உடலில் உள்ள வண்ணம், கோடுகள் பட்டுப்போன இலைகள் மற்றும் புதர்களின் வண்ணத்தை ஒத்திருக்கும். அச்சமூட்டப்படும்போது டினாமஸ் பறவை சிறிது தூரம் கன்னாபின்னாவென பறந்து, பின் தன்னை மறைத்து கொள்ளும்படி புதர்களின் ஊடே பறந்து மறைந்து கொள்ளும்.
ஸ்டைல்காரி!
பச்சை டக்கேன் பறவை பழம் தின்னும் வகை பறவை. இவரது மூக்கு ரொம்ப பெரியது. அமெரிக்க வெப்ப மண்டல பகுதியில் வாழும் பல வகை சிறப்பியல்புகள் கொண்ட பறவை இது. உண்மையான நாட்டுப்புறத்து பறவைகள் இவைகள்தான். இவை கூட்டம் கூட்டமாய் இருப்பதை பார்ப்பதற்கு சலிக்கவே சலிக்காது. இவை உட்காரும் விதம் மிக மிக வித்தியாசமா இருக்கும். உணவை பறித்து உண்ணும் ஸ்டைலும் விநோதமானது. இவை பூச்சிகள், சில சமயம் பல்லிகளையும் உண்ணும். தன்னுடைய அலகின் ஓரத்தில் (கூரிய பற்களை போல சில இலைகளின் ஓரங்களில் இருப்பது போல) இருக்கும் அமைப்பு மூலம் பழங்களை திறந்து உண்ணும். பின் திறந்த பழத்தை ஒரு வாயளவு மேலே துப்பி பின் அதில் தின்ன கூடிய பகுதிகளை மட்டும் தன் அலகை திறந்து பிடித்து உண்ணும்.
