தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பேரரசர் அக்பர்!

பேரரசர் அக்பர்!

பேரரசர் அக்பர்!


PUBLISHED ON : செப் 12, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 12, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முகலாய வம்சத்தில், முதல் பேரரசர் என்ற பெருமையை பெற்றவர் அக்பர். 19ம் வயதில் அரியணை ஏறினார்; இந்தியாவின் பெரும் பகுதியை அதிகாரத்திற்குள் கொண்டு வந்தார்.

ஆட்சியை, சிறப்பாக நடத்தி, நிர்வாகத்தில் சீர்திருத்தங்களைப் புகுத்தினார். நீதி பரிபாலனத்தில் தனி முத்திரை பதித்தார்.

நெடிய தோற்றமும், கூரியப் பார்வையும் கொண்டவர் அக்பர். அவரது முக வசீகரமே, அன்பையும், ஆதரவையும் பெற்று தந்தது.

வீரம் மட்டுமின்றி, விவேகமும் நிறைந்தவர்.

பீர்பால், மான்சிங், இசைவாணர் தான்சேன் போன்ற, அறிஞர்கள் அவரது சபையை அலங்கரித்தனர்.

அப்போது, அக்பரின் வயது, 60; உடல் தளர்த்து விட்டது. மூன்று மகன்களில், ஜஹாங்கீர் மட்டுமே உயிருடன் இருந்தார். அவருக்கு ரஜபுத்திர இளவரசியை திருமணம் முடித்தார்.

பொறுப்பற்றவராக இருந்தார் ஜஹாங்கீர். அதனால் ஏற்பட்ட கவலை, முதுமையால் படுக்கையில் விழுந்தார் அக்பர்.

இறக்கும் தருவாயில், மகன் ஜஹாங்கீரை அழைத்தார். தந்தை உயிர் பிரியப் போவதை அறிந்து, கண்ணீர் உகுத்தார் ஜஹாங்கீர். பணியாளர்களிடம், பாரம்பரியம் மிக்க ஹுமாயூனின் வாளையும், ராஜகிரீடமான தலைப்பாகையையும் ஜஹாங்கீரிடம் கொடுக்க உத்தரவிட்டார்.

சபையினருக்கு விவரம் புரிந்தது!

அக்பரின் இறுதி விருப்பமாக, ஆஸ்தான பாடகர் தான்சேன் உருக்கமாக இசை மழை பொழிந்து கொண்டிருந்தார். அதை கேட்டபடியே உயிர் பிரிந்தது.

தற்போதைய உத்தரபிரதேச மாநிலம், ஆக்ராவை அடுத்த, சிக்கந்தராவில், அக்பர் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us