PUBLISHED ON : ஜூன் 21, 2019

ஐரோப்பா கண்டம், ஜெர்மனி நாட்டில், ஏப்., 10, 1755ல் பிறந்தார் சாமுவேல் ஹானிமன். மருத்துவம் மூலம், மக்களுக்கு உதவ விரும்பினார்.
நோய்கள் குறித்தும், அவற்றை நிரந்தரமாக குணமாக்கும் வழிமுறைகள் பற்றியும், தீவிரமாக ஆராய்ந்து, 'ஹோமியோபதி' என்ற மருத்துவ முறையைக் கண்டுபிடித்தார்.
உலகம் எங்கும், ஹோமியோபதி மருத்துவ முறை, இன்று, செல்வாக்குடன் உள்ளது. ஆங்கில மருத்துவ முறைக்கு ஈடாக, நோயைக் குணமாக்கி வருகிறது என்று, மருத்துவ மேதைகள் கூறுகின்றனர்.
தமிழகத்திலும், இம்மருத்துவ முறை வளர்ந்து வருகிறது; அனைத்து நகரங்களிலும், ஹோமியோபதி மருத்துவமனைகள் உள்ளன.
சில, கடுமையான நோய்களை தீர்க்க, அலோபதி மருத்துவர்களும் நம்புவது ஹோமியோபதி மருத்துவ முறையை தான்.
இத்தகைய அற்புத மருத்துவ முறையைக் கண்டுபிடித்து, மனித குலத்திற்கு ஒப்பற்ற தொண்டாற்றியவர் சாமுவேல் ஹானிமன்.
