தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/தெரிஞ்சுக்கோங்க!

தெரிஞ்சுக்கோங்க!

தெரிஞ்சுக்கோங்க!


PUBLISHED ON : அக் 03, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 03, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கவனம் சிகரம் சேர்க்கும்!

விண்வெளியில் பறந்து ஆய்வுகள் புரிய, ஆசியா, ஐரோப்பா கண்டங்களை உள்ளடக்கிய நாடான ரஷ்யாவைச் சேர்ந்த, விண்வெளி வீரர்கள், யூரி காகரின், டிட்டோச் இறுதி போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தனர். திட்டத்துக்கு ஒருவரை தேர்வு செய்ய வேண்டும். வயர்கள் இணைக்கப்பட்ட கட்டிலில், இருவரையும் தனித் தனியாக துாங்க வைத்தனர்.

மறுநாள் எழுந்ததும், துாங்கிய அனுபவங்களை கேட்டனர்.

யூரி காகரின் விழிப்போடு இருந்ததால், வயர் கட்டிலில் ஏற்பட்ட அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.

டிட்டோச் நன்றாக துாங்கியதால், சொல்ல ஒன்றுமில்லை. இறுதியில் யூரி காகரின் தேர்வு செய்யப்பட்டார். விண்வெளியில் பறந்து, ஆய்வுகள் நிகழ்த்தி சாதனை படைத்தார்.

எந்த சூழ்நிலையிலும் விழிப்போடு இருந்தால் தான், மகத்தான சாதனைகளை நிகழ்த்த முடியும்.

ஒரே நாற்காலி மட்டும்!

ரயில் பெட்டியை உருவாக்கி, உலகப் புகழ் பெற்றவர் புரூனல். அவரது அலுவலக அறையில், ஒரே ஒரு நாற்காலி மட்டும் தான் இருக்கும். அதில் அவர் உட்கார்ந்திருப்பார்.

சந்திக்க வருபவரை நிற்க வைத்து, பேசி அனுப்புவார். வந்தவர் முக்கியமானவராக இருந்தால், நாற்காலியில் அமரச் சொல்லி, நின்றபடியே பேசுவார்.

காரணமில்லாமல் வந்து, அரட்டையடித்து நேரத்தை பாழ்படுத்துபவர்களை தவிர்ப்பதற்காகவே, இந்த மாதிரி ஏற்பாட்டை செய்திருந்தார் புரூனல்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us