PUBLISHED ON : ஜூன் 10, 2023

* நிலக்கடலை, பெருங்காயம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் மற்றும் அரிசியை வறுத்துப் பொடி செய்து, உருளைக்கிழங்கு வறுவலில் சேர்த்தால் கூடுதல் மணமும், ருசியும் இருக்கும்.
* வெங்காயத்தை, தோல் உரிக்காமல் வட்டமாக வெட்டிய பின், உரித்தால் தனித்தனியாக பிரியாமல் வட்டமாக இருக்கும். வடிவமாக பஜ்ஜி சமைக்க இது உகந்தது
* அவலை பொடி செய்து, நெய்யில் வறுத்து, பால் பவுடரை கலந்தால், ரவா லட்டின் சுவை மேலும் கூடும்
* கத்தரிக்காயை ஹாட் பாக்சில் மூடி வைத்தால் வாடாமல், நிறம் மாறாமல் இருக்கும்
* கீரையை, ஒன்றிரண்டாக நறுக்கி சுத்தம் செய்த பின், அளவாக தண்ணீர் சேர்த்து வேகவிட்டு அரைத்தால் மசிந்துவிடும்
* பாகற்காயை தயிரில் ஊற வைத்து வதக்கினால் கசப்பின்றி, பொரியல் சுவையாக இருக்கும்
* சாம்பாரில் புளிப்புச் சுவை அதிகமானால், வெங்காயத்தை நறுக்கி, தகுந்த அளவில் பச்சை மிளகாயுடன், எண்ணெயில் வதக்கி சேர்த்து, கொதிக்க வைத்தால் சுவையாகும்.
- ஏ.எஸ்.கோவிந்தராஜன்
