PUBLISHED ON : அக் 30, 2021

உயிர் காக்கும் மாத்திரை முதல் ஐஸ்கிரீம் தயாரிப்பு வரை, பயன்படுகிறது நெருப்பில் உருவாகும் கரி. ஆரோக்கியம், அழகு தரும் கரி குறித்து பார்ப்போம்...
உணவு சாப்பிட்டதும், சிறிய கரித்துண்டை வாயில் போடும் வழக்கம், ஆப்பிரிக்க காடுகளில் உள்ள, 'ரெட் கொலம்பர்' என்ற வகை குரங்குகளிடம் உள்ளது. சயனைட் போல் விஷத்தன்மை கொண்ட தாவர இலைகளையும் இவை உண்கின்றன. இவற்றை சாப்பிட்ட பின், ஜீரணக்கோளாறு ஏற்படாமல் இருக்கவே, கரித்துண்டை அவை தின்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
தீயுடன் இணைந்தே பூமிக்கு வந்தது கரி என்பதை, 19 லட்சம் ஆண்டுகளுக்கு முன் மனிதன் அறிந்தான். தீ எரிந்த பின் கிடைக்கும் கரிக்கட்டையின் பயனையும் புரிந்து கொண்டான். சமைத்த உணவை உண்ணக் கற்றுக் கொண்டான்.
கிரேக்க அறிஞர் ஹிப்போகிராட்டிஸ், கி.பி., 4ம் நுாற்றாண்டில் கரியின் பயன்களைப்பற்றி ஆராய்ந்தார். விஷத்தன்மையை திருப்பி எடுக்க கரியால் முடியும் என கண்டறிந்தார்.
கொடிய வெர்டிகோ, ஆந்திராக்ஸ் போன்ற நோய்களை குணமாக்க கரிமருந்து பயன்படுத்தும் வழக்கமும் பண்டைய காலத்திலேயே இருந்தது. காயத்தில் உருவாகும் துர்நாற்றம் அகலவும், உடலில் விஷத்தன்மையை முறிக்கவும் மருத்துவமனைகளில் இன்றும், கரி பயன்படுத்தப்படுகிறது.
- அபிஷேக்
