தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/காடுகள்... மனிதனின் உறுதுணை!

காடுகள்... மனிதனின் உறுதுணை!

காடுகள்... மனிதனின் உறுதுணை!


PUBLISHED ON : ஏப் 11, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 11, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாழ்க்கையில் முன்னேற்றம்.... மனிதனை புதிய இடங்களை நாடிச் செல்ல வைத்தது. சென்ற இடங்களில் வாழ முதலில் கொஞ்சம் காட்டை வெட்டினான். அங்கு தன் வாழ்க்கையை ஓட்ட மேலும் அழித்து, பயிரிட்டான்... இதே போல் பலபேர் முயற்சிக்க காடு நகரமானது. மனிதர்கள் பெருகினர். காடு குறுகியது. ஆக... அறிவியல் முன்னேற்றம் காட்டின் முன்னேற்றத்தை அழிவுப் பாதைக்கு கொண்டு சென்று விட்டது.

* 2011ம் ஆண்டை, காடுகளின் ஆண்டாக 'யுனைடெட் நேஷன்ஸ்' அறிவித்து கடைபிடித்தது. ஏன்? காட்டின் அவசியத்தை மக்களிடையே வலியுறுத்த! தேவையை புரிந்து கொள்ள...!!!

* ஒருமரம் தன் வாழ்நாளில் சராசரியாக 50 ஆண்டுகள் வாழ்கின்றன. 2700 கிலோ கிராம் ஆக்ஸிஜனை வெளியில் விடுகிறது.

* 20ம் நூற்றாண்டின் மிகப்பெரிய வருத்தப்படத்தக்க சாதனை எது தெரியுமா? மரங்களுக்கும், மிருகங்களுக்கும் நம்மை அறியாமல், நாம் செய்யும் தீங்குதான். மரங்களை வெட்டி, காட்டை நாடாக்கியதால், மழையும் பாதியாய் குறைந்து, மிருகங் களின் நடமாட்டத்திற்கும்இடைஞ்சலாகி விட்டது.

* இன்றும் உலகில் 1.6 பில்லியன் மக்கள், காட்டை தான் தங்கள் வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர்.

* உலகின் மொத்த நிலப்பரப்பில் 1/3 பகுதி காடுகள். இதில் 95 சதவீதம் இயற்கை காடுகள்; மீதி ஐந்து சதவீதம் உருவாக்கப்பட்ட காடுகள்.

* 14ம் நூற்றாண்டில்தான் 'காடு' என்ற வார்த்தை புத்தகங்களில் இடம் பெற்றது.

* உங்களுக்கு தெரியுமா? உலகின் மொத்த காடுகளில் 1/4 பங்குக்கும் அதிகமான காடுகள் ஐரோப்பாவின் பிரேசில் மற்றும் ரஷ்ய நாடுகளில்தான் உள்ளன.

* தென் அமெரிக்காவை விட மத்திய அமெரிக்காவில் காடுகள் அதிகம். தென் அமெரிக்காவுக்கு மற்றொரு சிறப்பு உண்டு. அங்கு மொத்த நிலப்பரப்பில் பாதி காடுகள்.

* ஆசியாவில்தான் காட்டுப்பரப்பு மிகவும் குறைவு. மொத்தமே 20 சதவீதம் தான்!

* உலகின் ஏழு நாடுகளில் 100 மில்லியன் ஹெக்டேருக்கு அதிகமாக காட்டுப் பரப்பு உள்ளது.

* உங்களுக்கு தெரியுமா? உலகின் 10 நாடுகளில் காடே கிடையாது. மற்றும் 64 நாடுகளில் மொத்த நிலப்பரப்பில் 10 சதவீதம்தான் காடுகள்...!

* உலகில் காடுகள் அழிந்து வருவதற்கு முக்கிய காரணமே 10 நாடுகள்தான். இவைதான் உலகின் காடுகளில் 87 சதவீத அழிப்புக்கு காரணம். இதில் முன்னணி இடங்கள் பிரேசில் மற்றும் இந்தோனேஷியாவுக்கு...

* உலகில் வாழும் ஜீவராசிகளில் 2/3 காட்டில்தான் வசிக்கின்றன.

* இருக்கும் காடுகளில் 50 சதவீத காடுகள், கடும் மழையை சந்திப்பவை. ஆனால், இங்குதான் உலக மொத்த மிருகங்கள் மற்றும் மரங்களில் 50 சதவீதம் உள்ளன. செடி கொடிகளின் பெரும் வாழ்க்கையே இங்குதான்.

எனவே காடுகளை பாதுகாப்போம்; தூய வாழ்வு பெறுவோம் குட்டீஸ்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us