sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

தலைமுறை அறிவுரை!

/

தலைமுறை அறிவுரை!

தலைமுறை அறிவுரை!

தலைமுறை அறிவுரை!


PUBLISHED ON : மார் 13, 2021

Google News

PUBLISHED ON : மார் 13, 2021


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டை, ஜி.வி.ஜி.விசாலாட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 1992ல், 9ம் வகுப்பு படித்தேன். சராசரியாக படிக்கும் மாணவி நான்; ஒரு நாள், வீட்டுப்பாடம் எழுத தவறிவிட்டேன். வகுப்பு ஆசிரியர் ஜோதிமணி, வரிசையாக சோதனை செய்தபடி வந்தார். என்முறை வந்ததும், கை, கால்கள் நடுங்கியபடி அழ ஆரம்பித்து விட்டேன்.

என்னை எதுவுமே கேட்கவில்லை; பாடம் நடத்த ஆரம்பித்தார். பின், தனியாக அழைத்து, 'எதற்கும் பெண் அழக் கூடாது; அழுவது பலம் அல்ல; ஆயுதமும் அல்ல. அது பலவீனம்... வீட்டுப் பாடம் எழுதவில்லை என்றால், மன்னிப்பு கேள்; அதை விடுத்து அழுவதால் பயன் இல்லை...' என்று அறிவுரைத்தார்.

வாழ்வில் மறக்க முடியாத நாளாக அது அமைந்தது; அன்று முதல் வீட்டுப்பாடம் எழுத தவறியதில்லை. எப்போதும் துணிவை கைக்கொண்டு வருகிறேன். இப்போது என் வயது, 43; அந்த ஆசிரியரின் அறிவுரையை, வாழ்வில் பின்பற்றுகிறேன். அவரை நன்றியுடன் நினைவில் கொண்டுள்ளேன். அவர் கூறியதையே, என் பிள்ளைகளுக்கும் சொல்லிவருகிறேன்.

- கலைமணி, கோவை.






      Dinamalar
      Follow us