தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/நெய் அப்பம்!

நெய் அப்பம்!

நெய் அப்பம்!


PUBLISHED ON : டிச 28, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 28, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேவையான பொருட்கள்:

வாழைப்பழம் - 2

அரிசி மாவு - 1 கப்

வெல்லம் - 100 கிராம்

சோடா உப்பு - சிறிதளவு

தேங்காய், நெய், ஏலப்பொடி,

தண்ணீர் - தேவையான அளவு.

செய்முறை:

வாழைப்பழத்தை, நன்கு அரைத்துக் கொள்ளவும். பின், வெல்லத்தில் தண்ணீர் சேர்த்து காய்ச்சி, வடிகட்டி பாகாக்கிக் கொள்ளவும்.

அரைத்த வாழைப்பழம், வெல்லப்பாகு, அரிசி மாவு, சிறு துண்டுகளாக்கிய தேங்காய், சோடா உப்பு, ஏலப்பொடியை, நன்கு கலந்து இட்லி மாவு பதமாக்கவும்.

இந்த மாவை, குழி பணியார சட்டியில் ஊற்றி, அப்பங்களாக சுட்டு எடுக்கவும். சுவைமிக்க, 'நெய் அப்பம்' தயார். வித்தியாசமான சுவையில் இருக்கும். அனைவரும் விரும்பி உண்பர்.

- சி.சிந்துஜா, சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us