தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பரிசும் பாராட்டும்!

பரிசும் பாராட்டும்!

பரிசும் பாராட்டும்!


PUBLISHED ON : அக் 24, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 24, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுக்கோட்டை மாவட்டம், குழிபிறை, ராமநாதன் செட்டியார் உயர்நிலைப் பள்ளியில், 1972ல், எஸ்.எஸ்.எல்.சி., படித்தபோது, தமிழ் ஆசிரியராக இருந்தார் சண்முகம்.

தமிழ் பாடத்தில் ஆர்வம் மிகுந்த என்னை போட்டிகளில் பங்கேற்க ஊக்குவிப்பார்.

மாநில அளவிலான தமிழ்மன்றத்தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது. அதில் பங்கேற்க, 120 ரூபாய் கட்டணம் செலுத்த முடியாமல் தவித்தேன். குடும்பத்தை வறுமை வாட்டியது.

என் திறன் உணர்ந்து, கட்டணத்தை செலுத்தினார் தமிழாசிரியர். தமிழ்மன்றத் தேர்வில் முதன்மை தகுதி பெற்றேன்; பரிசும், பாராட்டும் கிடைத்தது. அந்த மகிழ்ச்சியான தருணத்தை உருவாக்கி தந்தவரை பணிந்தேன்.

எனக்கு, 66 வயதாகிறது. பள்ளி நாட்களுக்கு பின், என் குடும்ப திருமண நிகழ்வுகளில் பங்கேற்று வாழ்த்திய அந்த ஆசிரியரின் முகம் கண்முன் நிற்கிறது.

- சொ.நாகராசன், கோவை.

தொடர்புக்கு: 95008 93255

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us