PUBLISHED ON : ஜூலை 05, 2019

அழகியனுார் என்ற கிராமத்தில், மூன்று ஆட்டுக் குட்டிகளை வளர்த்து வந்தார் பெரியவர் ரவி. அவற்றுக்கு, ராமு, சோமு, சீமு என, பெயர் வைத்தார். அவற்றை, காட்டிற்கு ஓட்டிச் சென்று, மேய்ப்பதும், திரும்ப வீட்டிற்கு ஓட்டி வருவதும் வழக்கம்.
ஒரு நாள் -
காட்டிற்கு, மூன்று குட்டிகளையும் ஓட்டிச் சென்ற போது, திடீரென ஒரு சத்தம் கேட்டது. எதிர்பாராத நேரத்தில், மூன்று ஆட்டுக் குட்டிகளும், ஒவ்வொரு திசையில் பிரிந்தன. வழித்தவறிய சோமு ஆட்டுக்குட்டி, வேட்டைக்காரன், தோண்டி வைத்திருந்த குழியில் விழுந்திருந்தது.
அது, 'காப்பாற்றுங்க... காப்பாற்ற யாரும் இல்லையா...' என, கத்தியபடியே இருந்தது.
அவ்வழியே சென்ற நரிகள், ஆட்டுக் குட்டியின் குரலை கேட்டு, குழி அருகே வந்தன.
அந்த ஆட்டிக்குட்டியைப் பார்த்து, 'ஐயோ... கடவுளே, இந்த குழியில் விழுந்த யாரும் இதுவரை உயிர் பிழைத்தது இல்லையே...' என்று கூறியபடி சென்றன.
இதைக் கேட்டு பயந்த ஆட்டுக்குட்டி, உயிரை விட்டது. இறந்த பின், 'கடுமையாக போராடி, அழைத்தும், காப்பாற்ற வரவில்லையே...' என்று கடவுளிடம் முறையிட்டது.
'யாரே சிலர், சொன்னதைக் கேட்டு, உயிரை விட்டாயே! சிறிது நேரம் பொறுமையாக இருந்திருக்கக் கூடாதா... உதவிக்கு ஒருவரை அனுப்பியிருப்பேனே...' என்றார் கடவுள்.
குட்டீஸ்... பொறுமையாக இருந்தால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.
- பெ.மாதவன்
