தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/சிரித்தால் முத்து உதிரும்! (1)

சிரித்தால் முத்து உதிரும்! (1)

சிரித்தால் முத்து உதிரும்! (1)


PUBLISHED ON : ஜூலை 05, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 05, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒரு நாள் -

மன்னர் விக்கிரமாதித்தன், அமைச்சர் பட்டியைப் பார்த்து, 'இன்றுடன் நாட்டில் வசித்த, ஆறு மாதங்கள் முடிகிறது. நாளை முதல், ஆறு மாதங்கள், காட்டில் வாசம் செய்ய வேண்டும். எனக்கு பதிலாக, நீ ஆட்சியை கவனித்துக் கொள்...' என்று கூறி, மாகாளியை வணங்க சொன்றார்.

மாகாளியை வணங்கிய போது, 'குழந்தாய்... உனக்கு ஏழரை நாட்டுச் சனி ஆரம்பம் ஆக போகிறது. சனி பகவான் உன்னைப் பிடிக்க வருகிறார்; அவரிடம் ஜாக்கிரதையாக இருந்துக் கொள்...' என்று எச்சரித்தாள்.

'தாயே... நான் அவரிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்...' என்றார்.

'சனி பகவானை எங்கு வந்தீர் என்று கேள்; உன்னைப் பிடிக்க வந்திருப்பதாக கூறுவார்; ஒரே நேரத்தில் நெருக்கினால், என்னால் தாங்க முடியாது. தாங்கள் விரும்புவது மாதிரி நடந்து கொள்கிறேன் என்று கூறு...' என்றாள்.

அதுபோலவே எதிர்ப்பட்டவரிடம், 'ஐயன்மீர் என் முன் வரும் காரணம் என்னவோ...' என்றார்.

'விக்கிரமாதித்தா... ஏழரை ஆண்டுக் காலம் உன்னைப் பிடித்துக் கொள்ள போகிறேன்; அதற்காகத்தான் வந்துள்ளேன்...'

'ஐயனே... தேவர்களையும், மும்மூர்த்திகளையும் விட்டு வைக்காத நீங்கள், என்னையும் விட மாட்டீர் என்று தெரியும். அடியேனை ஒரே நேரத்தில் கொடுமைப்படுத்தினால் தாங்க முடியாது...'

'விக்கிரமாதித்தா... நீ விரும்பும் விதமே நடக்கிறேன். ஆனால், ஒன்று, 56 தேச அரசர்களையும், உன் ஆணையின் கீழ், இனி அடக்க முடியாது. அதற்கு நேர்மாறாக மகேந்திரபுரியை ஆளும் விமலேந்திரனிடம், ஏழரை ஆண்டு, நீ ஊழியனாக வேலை செய்ய வேண்டும்; இறுதியில், ஒரு நாள், அவனுக்கு அடிமையாகவும் இருக்க நேரிடும்...'

'தங்கள் உத்தரவுப்படியே நடக்கிறேன்; நான் திரும்பி வரும் வரை, என் தேச மக்களை எவ்வித குறையுமின்றி காப்பாற்ற வேண்டும்...' என்று வேண்டி, வேதாளத்துடன் காட்டுக்குச் சென்றார் விக்கிரமாதித்தன்.

காட்டில், ஒரு ஆலமரத்தடியில் களைப்பு நீங்கப் படுத்திருந்தார்.

அங்கு வந்த அவலட்சண பெண், 'ஐயா... நான் தேவேந்திரனுக்கு வெண்சாமரம் வீசும் பணிப்பெண்; என் பெயர் ரத்தினமாலை. தாங்கள் ஒருமுறை, தேவலோகத்திற்கு வந்து, ரம்பை, ஊர்வசி நடனத்தைப் பார்த்து தீர்ப்பளித்தது நினைவிருக்கு...

'தங்கள் மீது தேவேந்திரன் மிகுந்த மதிப்பு வைத்துள்ளார். தங்களுக்கு, ஏழரை நாட்டுச் சனி பிடித்திருப்பதால், தங்களுடன் இருந்து பணிவிடை செய்ய, தேவேந்திரன் அனுப்பினார்...' என்றாள்.

'இவ்வளவு அவலட்சணமான நீ, தேவேந்திரனுக்கு வெண்சாமரம் வீசும் பணிப்பெண் என்பதை நம்ப மாட்டேன்...' என்றார் விக்கிரமாதித்தன்.

உடனே ரத்தினமாலை, தன் அழகிய சுய உருவை காட்டி, 'பகற்பொழுதில் அழகிய உருவில் இருக்க கூடாதென்றும், இரவில் மட்டும், சுய உருவில் இருக்கலாமென்றும் தேவேந்திரன் கூறி உள்ளார். அதனால் தான், அவலட்சண உருவில் வந்தேன்...' என்று கூறினாள்.

அவளையும் அழைத்துக் கொண்டு மகேந்திரபுரியை நோக்கிச் சென்றார். வழியில், ஒரு தடாகம் தென்பட்டது; தாகம் தணிக்க, அதில் இறங்கிய போது, ஒரு பாம்பு, தவளையைக் கவ்வி பிடித்தது.

அந்த தவளை, 'பாம்பே... நீயும், நானும் முற்பிறவியில் அரச குமாரர்களாக இருந்தோம். நாரத முனிவரின் சாபத்தால், இந்த பிறவியை எடுத்துள்ளோம். அவ்வாறு இருக்க, நீயே என்னை விழுங்கலாமா... இதை, விக்கிரமாதித்தன் கண்டால் சும்மா விடுவாரா...' என்று கூறியது.

இதைக் கேட்ட விக்கிரமாதித்தன், உடைவாளால், தன் தொடையில் சிறிது சதையை அறுத்து, பாம்பை நோக்கி வீசினார்.

வாயில் கவ்வியிருந்த தவளையை விட்ட பாம்பு, 'இவ்வாறு செய்யக் கூடியவர் விக்கிரமாதித்த மன்னராகத்தான் இருக்க வேண்டும்...' என்று கூறியது.

'ஆமாம் நண்பா... அவரால் தான், சாப விமோசனம் அடைய வேண்டும். எனவே, அவருக்கு தொண்டு செய்வோம்...' என்றது தவளை.

தடாகத்தில் இருந்து வெளியேறிய பாம்பும், தவளையும் ஓடி வந்து, விக்கிரமாதித்தனை வணங்கின.

'நீங்கள் யார்... எதற்காக என்னை வணங்குகிறீர்கள்...' என்று கேட்டார் விக்கிரமதித்தன்.

'ஐயா... என் பெயர் அனந்தன்; இவன் பெயர் சலந்திரன்; முற்பிறவியில் அரசகுமாரர்களாக இருந்தோம். ஒருமுறை, நாரத முனிவரின் கோபத்திற்கு உள்ளாக நேரிட்டது. அவர் என்னைப் பாம்பாகவும், நண்பனை தவளையாகவும் மாற சபித்து விட்டார்...

'எப்போது சாப விமோசனம் கிட்டும் என்று கேட்டதற்கு, 'விக்கிரமாதித்த மன்னர் ஏழரை நாட்டுச் சனியால் பிடிக்கப்படுவார். அக்காலத்தில், நீங்கள் அவருக்கு தொண்டு புரிந்தால், சாப விமோசனம் ஆகும்' என்று கூறினார். அதற்காகத்தான் உங்களிடம் வந்தோம்; எங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும்...' என்றது பாம்பு.

'நான் மகேந்திரபுரியை அடைய இன்னும், எட்டு நாட்கள் ஆகும்; அங்கு சென்றவுடன், நகரின் வடக்குப் பகுதியில், ஒரு சத்திரத்தில் தங்கியிருப்பேன்; என்னைக் காணுங்கள்...' என்று கூறினார்.

பின், வேதாளம், ரத்தினமாலையுடன், மகேந்திரபுரியை அடைந்தார் விக்கிரமாதித்தன். சத்திரத்தற்குச் சென்ற போது, அனந்தன் பாம்பும், சலந்திரன் தவளையும் காத்திருந்தன.

பின், ஒரு சேவகன் போல் வேடமணிந்த விக்கிரமாதித்தன், மகேந்திரபுரி அரசவைக்குச் சென்றார். மகேந்திரபுரி அரசர், 'நீ யார்... இங்கு வந்த காரணம் என்ன...' என்றான்.

'அரசே... என் பெயர் வீரகேசரி தாங்கள் சிறந்த கொடையாளி என்றும், உண்மையான வீரர்களைப் போற்றி காப்பவர் என்றும் கேள்விப்பட்டேன்; தங்களிடம் ஊழியம் செய்ய வந்துள்ளேன்...' என்றார் விக்கிரமாதித்தன்.

- தொடரும்...

- கண்ணப்பன் பதிப்பகம்


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us