தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/தங்க திரவம்!

தங்க திரவம்!

தங்க திரவம்!


PUBLISHED ON : அக் 03, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 03, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மனித உடலுக்கு தேவையான உயிர் சக்தியை தர வல்லது நெய். இதை ஆயுர்வேத மருத்துவம், 'தங்க திரவம்' என புகழ்கிறது.

நெய் மணமுள்ள உணவு பொருள்; அன்றாடம் சமையலுக்கும், பூஜை பொருளாகவும் பயன்படுத்துகிறோம். பசு, எருமை பாலில் இருந்து நெய் கிடைக்கிறது. அடர்த்தியான மஞ்சள் நிறம் முதல், வெளிர் மஞ்சள் நிறம் வரை காணப்படும்.

நெய்யில் உள்ள, 'ஒலியிக் அமிலம்' பல நோய்களை குணப்படுத்தும் ஆற்றலுடையது; பெருங்குடலையும் சுத்தம் செய்யும்.

பசுநெய், நாள்ப்பட்ட இருமலை குணமாக்கும்; பார்வையை மேம்படுத்தும். பற்களை உறுதிப்படுத்தும்.

தினமும் உணவில் நெய் சேர்த்தால், இளமை மேம்படும். நினைவாற்றலை துாண்டும். சிறப்பு மிக்க நெய்யை, உணவில் அளவுடன் சேர்த்து நலம் பெறலாம்.

- வி.ராஜேந்திரன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us