தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/கொரில்லா

கொரில்லா

கொரில்லா


PUBLISHED ON : ஆக 29, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 29, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மனிதனுக்கு மிக நெருங்கிய உயிரினம் கொரில்லா. வாலில்லாத மனித குரங்கு இனம். இதன் டி.என்.ஏ., 95 முதல் 99 சதவீதம் மனிதனை ஒத்துள்ளது. பரிமாண வளர்ச்சி தத்துவத்தில், சிம்பன்சி போல் மனிதனுக்கு நெருங்கிய இனம்.

மேற்கு ஆப்பிரிக்க வெப்ப மண்டலக் காடுகளில், 1847ல் இது கண்டறியப்பட்டது; கறுப்பு வண்ணத்தில் பெரிய உருவம் கொண்டது. இலை, தழை மற்றும் சிறு பூச்சிகளை உணவாகக் கொள்ளும்.

ஆண் கொரில்லா, 150 கிலோ வரை எடை இருக்கும்; பெண் அதில் பாதி எடையைக் கொண்டிருக்கும். இதன் அகன்ற மார்பையும், நீண்ட கைகளையும், உயரத்தையும் கண்டால் கடும் வியப்பு ஏற்படும்.

குரங்கு இனங்களில், விலிமை மிக்க வீரனை போல் ஆற்றல் உள்ளது. இயல்பில், எந்த உயிரினத்துக்கும் தீங்கு செய்வதில்லை: குடும்பமாக வாழும். எதிரிகள் தாக்க வரும் போது, பாதுகாப்புக்காக தாக்கும்.

மிகவும் கூச்ச மனப்பன்மை கொண்டது. முகம் பளப்பளப்புடன் அடர் கருப்பு நிறத்தில் இருக்கும்; முகம், மார்பு, உள்ளங்கை, உள்ளங்கால் தவிர, உடம்பெல்லாம் பஞ்சு போன்று மயிர் அடர்த்தியாக இருக்கும்.

வயதான ஆண் கொரில்லாவின் தலையில், சேவல் கொண்டை போல் முகடு காணப்படும். பின்முதுகில் வெள்ளை நிறத்தில் முடி நரைத்து இருக்கும்.

கொரில்லாவின் ஆயுள், 50 ஆண்டுகள். குடும்பத்தில், ஒரு ஆண் கொரில்லாவுடன், சில பெண் கொரில்லாக்கள் காணப்படும். குட்டியை ஈன்று, மூன்று மாதம் வரை பாதுகாத்து பராமரிக்கும் பெண் கொரில்லா.

குட்டி வளர்ந்ததும், குடும்பத்திலிருந்து பிரிந்து விடும்.

- சக்திபிரியா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us