PUBLISHED ON : ஜன 04, 2020

அ நிறம் | அளவு
தேவையான பொருட்கள்:
பாசிப்பயிறு - 1 கப்
துருவிய கேரட், பீட்ரூட்,
மாங்காய் - தலா 2 தேக்கரண்டி
குடை மிளகாய் - 2 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
மக்காச்சோளம், கொத்தமல்லி, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
பாசிப்பயிறை சுத்தம் செய்து வேக வைக்கவும்; ஒரு கடாயில், எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயம், தக்காளி போட்டு தாளிக்கவும். அதனுடன், வெந்த பாசிப்பயிறு, கேரட், குடை மிளகாய், மாங்காய், பீட்ரூட், மக்காச்சோளம் போட்டு நன்கு கிளறவும்.
இந்த கலவை வெந்ததும், நறுக்கிய கொத்தமல்லி இலைகளைத் துாவி இறக்கவும். சூடான சுவையான, 'தானிய சுண்டல்' தயார். ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. சிறுவர், சிறுமியர் விரும்பி உண்பர்.
- ஆர்.லேகா, திருப்பூர்.
