PUBLISHED ON : நவ 21, 2014

இமாச்சலப் பிரதேசத்தின் குலு ஜில்லாவில் பிரம்மாண்ட ஹிமாலயன் தேசிய பூங்கா அமைந்துள்ளது.
1500 மீட்டர் முதல் 6000 மீட்டர் வரை, கடல் மட்டத்திற்கு மேல் இந்த பூங்கா அமைந்துள்ளது. அதாவது 1171 கிலோ மீட்டரில் சுமார் 90,540 ஹெக்டரில் இது பரவிக்கிடக்கிறது.
உலக நாடுகளின் கல்வி, அறிவியல், மற்றும் கலாசார இயக்கமான யுனெஸ்கோவால் 2014ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி இந்த பூங்கா... தேசிய மற்றும் உலக பாரம்பரிய இடமாக அங்கீகரிக்கப்பட்டது.
சுற்றிலும் உயரமான மலைமரங்கள்... பசும்புல் நிலங்கள்... ஆறுகளை ஒட்டிய காடுகள் என இந்த இடமே இயற்கையின் எழில் பூமி.
இதனுள் 832 செடி வகை களும், பல அழியும் நிலையில் உள்ள தாவரங்களும் உள்ளன. 128 குடும்பங்களைச் சார்ந்த இவை, 472 பிரிவுகளில் இங்கு வளர்கிறது. இவற்றை பாது காத்து, அதிகரித்து, வளமூட்ட அமைக்கப்பட்டதுதான் தேசிய பூங்கா!
*இங்கு பலவகையான ஆடுகள் <உள்ளன. அவை டாகிர்... சீரோ... கோரல் என அழைக்கப்படுகின்றன.
*சிறுத்தைக்கு பேர் போன இடம்.
* ஹிமாலயன் கருப்பு கரடி, ஒருவகை சுண்டெலி, பறவை களில் புறா போன்ற அமைப்பு கொண்ட டிராகோபான்... கோழி மாதிரி உருவம் கொண்ட சியர் பீசன்ட் என்ற பலவகையான நூதன ஐயிட்டங்களையும் இங்கு காணலாம்.
அழகு கொழிக்கும் பூமியை, கெடாமல் அப்படியே பாது காப்பதால் தான் இதற்கு யுனெஸ்கோ அங்கீகாரம்.இது இந்த வருடம் ஜூன் 23ம் தேதி... உலக பாரம்பரிய இடமாக இறுதியாக அறிவிக்கப் பட்டு விட்டது.
- திலீப்
யுனெஸ்கோ பற்றி சில தகவல்கள்!
*1945ம் ஆண்டு நவம்பர் 16ம் தேதி, மனிதர்களின் மனதில் அமைதியை உருவாக்க அமைக்கப்பட்டது.
* யுத்தங்களால் பாரம்பரிய இடங்கள் சீரழிவதை தடுக்கவே இந்த முயற்சி.
* உலகம் முழுவதும் இன்று 161 நாடுகளில் 1007 பாரம்பரிய மிக்க இடங்கள் உள்ளன.
இவற்றில்...
* 779... கலாசார சிறப்பு கொண்டவை,
* 197 இயற்கை சார்ந்தவை,
* 31 கூட்டாக அறிவிக்கப்பட்டிருப்பவை,
உலக அளவில்...
* இத்தாலியில் 50 பாரம்பரிய இடங்களும்,
* சீனாவில் 47 பாரம்பரிய இடங்களும்,
* ஸ்பெயினில் 44 பாரம்பரிய இடங்களும்,
* ஜெர்மனியில் 39 பாரம்பரிய இடங்களும்,
* பிரான்சில் 39 பாரம்பரிய இடங்களும் உள்ளன.
இந்தியாவில் 32 பாரம்பரிய இடங்கள் உள்ளன. இவற்றில் 25 கலாசார சிறப்பு உடையவை. 7 இயற்கை சார்ந்தவை. இவை நினைவு சின்னங்கள், கோட்டைகள், கோவில்கள், சர்ச்சுகள், குகைகள் மற்றும் பழைய கட்டடங்கள் என பல அடங்கியவை. முதல் பாரம்பரிய சின்னம் ஆக்ரா கோட்டை 1983.
