PUBLISHED ON : செப் 09, 2023

அ நிறம் | அளவு
தேவையான பொருட்கள்:
சாதம் - 500 கிராம்
பூண்டு பல் - 20
சீரகம் - 2 தேக்கரண்டி
மிளகுத்துாள், எண்ணெய், உப்பு, கறிவேப்பிலை - தேவையான அளவு.
செய்முறை:
வாணலியில் எண்ணெய் காய்ந்ததும், இடித்த பூண்டு, சீரகத்தை நன்கு வறுக்கவும். பின், கறிவேப்பிலை, மிளகுத்துாள், சாதம், உப்பு சேர்த்து கிளறவும். சுவை மிக்க, 'பூண்டு சீரக சாதம்' தயார்.
அனைத்து வயதினருக்கும் ஏற்றது. வாயுக் கோளாறு நீங்கும்.
- ஜெ.ஜலஜாதேவி, ராமநாதபுரம்.
தொடர்புக்கு: 98940 47063
