தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/இளஸ் மனஸ்! (214)

இளஸ் மனஸ்! (214)

இளஸ் மனஸ்! (214)


PUBLISHED ON : செப் 09, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 09, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்பு பிளாரன்ஸ் ஆன்டி...

என் வயது, 16; பிளஸ் 1 படிக்கும் மாணவன். கொசு விரட்டியை, 'ஆன்' செய்து வைத்து, அறை ஜன்னல், கதவை மூடியபடி துாங்குவது உயிருக்கு ஆபத்தானது என, எனக்கு தெரிந்த அண்ணன் கூறுகிறார். அது கேட்டு வியப்பு அடைந்தேன்.

அவ்வளவு விஷ தன்மை வாய்ந்ததா கொசு விரட்டி... கொசு ஆள் பார்த்து கடிக்கும் என்பது உண்மையா... உலகம் முழுக்க கொசுக்கள் இல்லாமல் செய்ய முடியுமா...

விளக்கி கூறுங்கள் ஆன்டி...

இப்படிக்கு,

எஸ்.அனந்தசயனம்.



அன்பு மகனுக்கு...

கொசு என்ற உயிரினம், 'குலிசிடே' குடும்பத்தை சேர்ந்தது. கொசுக்களில், 3,500 சிற்றின வகைகள் உள்ளன. இதன் ஆயுள், 90 நாட்கள்.

ஒரு பெண் கொசு, தன் ஆயுட்காலத்தில், 20 ஆயிரம் பேரை கடிக்கிறது. கொசுக்களால், ஜிகா வைரஸ் நோய், மேற்கு நைல் வைரஸ் நோய், சிக்குன்குனியா, டெங்கு, மலேரியா, மஞ்சள் காய்ச்சல், யானைக்கால் மற்றும் மூளைக்காய்ச்சல் நோய்கள் பரவுகின்றன.

கொசுக்கடியிலிருந்து தப்பிக்க, மனிதன் கீழ்கண்டவைகளை உபயோகிக்கிறான்.

 கொசு வத்தி சுருள்

 கொசு விரட்டி வில்லை

 கொசு விரட்டி திரவம்

 உடலில், பூசிக் கொள்ளும் கிரீம்

 கொசுவை பிடித்து அழிக்கும் மின்சார பேட்.

கொசு விரட்டி வில்லை, பைரித்ரம், அல்லெத்ரின், பிரால் லெத்ரின் ரசாயனங்களால் தயாரிக்கப்பட்டது.

ஒரு கொசு விரட்டி சுருளில், 100 சிகரெட் புகைக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. அறை கதவு, ஜன்னல்களை மூடி, கொசு விரட்டியை, 'ஆன்' செய்து படுத்தால், பல கேடுகள் விளையும்.

நுரையீரல் வீக்கம், ஆஸ்துமா, மூக்கு தொடர்பான புற்றுநோய், பெருங்குடல் பாதிப்பு, சைனஸ் வியாதிகள் வரும். அபூர்வமாக, மரணம் கூட சம்பவிக்கலாம்.

கொசுக்கடியிலிருந்து தப்பிக்க, சில மாற்று வழிகளை பார்ப்போம்...

 கொசு வலை கட்டுவது பாதுகாப்பானது

 வீட்டு ஜன்னல்களில், கொசு வலை ஸ்கிரீன் அடிக்கலாம்

 கற்பூரவல்லி மற்றும் கற்றாழை சாற்றை தண்ணீருடன் கலந்து வீட்டுக்குள் தெளிக்கலாம்

 நொச்சி, வேம்பு, பச்சை கற்பூரம் அரைத்து, வரட்டியாக தட்டி உலர்த்தி, ஊதுபத்தி ஆக்கி, மாலையில் எரிய விடலாம்

 நொச்சி, வேப்பிலை, காட்டு துளசி, பேய் துளசி, அசோலா, ரோஸ்மேரி, லெமன் கிராஸ், கற்பூரவல்லி, கற்றாழை வளர்க்கலாம்

 வேப்பெண்ணெய், யூகலிப்டஸ் எண்ணெய், கிராம்பு எண்ணெய் வீட்டுக்குள் தெளிக்கலாம்.

கொசு ஆள் பார்த்து கடிக்குமா... ஆம், சுய சுத்தமின்மை, வியர்வை நாற்றம், கார்பன்டை ஆக்சைடு வெளிப்பாடு, குடிப்பழக்கம் உள்ள மனிதர்களை கொசு அதிகம் கடிக்கிறது.

கொசு இல்லாத உலகத்தை உருவாக்க முடியுமா என்றால் அது தேவையில்லை. 3,500 கொசு வகைகளில், 200 வகையே மனிதரை கடிந்து ரத்தம் குடிக்கின்றன.

தீங்கு செய்யும் கொசுக்களை மட்டும் அழிக்கலாம். ஆண் மலட்டு கொசுக்களை உருவாக்கி, இனபெருக்கத்தை ஒழிக்கலாம். கொசு முட்டையிடும், நீர் நிலைகளில் கம்பூசியா மீன் வளர்க்கலாம்!

- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us