தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/உழைப்பே உயர் தரும்!

உழைப்பே உயர் தரும்!

உழைப்பே உயர் தரும்!


PUBLISHED ON : மே 04, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 04, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொன்னுசாமி என்ற குடியானவர், திண்டிவனத்தில் வசித்து வந்தார். அவருக்கு, மூன்று மகன்கள்; மூவருமே சேம்பேறிகள்; ஒருவர் கூட, தந்தைக்கு உதவி செய்வதில்லை; நிலத்தை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.

காலையில் எழுந்ததும், ஏரி, குளம், கோவில் மண்டம் என்று, நண்பர்களுடன் சுற்றித் திரிந்து, வேளா வேளைக்கு வீட்டில் சாப்பிட்டு, துாங்குவர்.

மகன்களின் பொறுப்பற்ற நடவடிக்கையால், கவலை அடைந்தார் பொன்னுசாமி. அவருக்கு கடும் காய்ச்சல் வந்து, படுத்த படுக்கையாகி விட்டார்.

'இனி, பிழைக்க மாட்டோம்' என்ற நிலையில், மகன்களை அழைத்து, ''என் காலத்துக்குப் பின், மூவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். நான், தேடி வைத்த புதையலை கண்டுபிடித்து, சமமாக பங்கிட்டுக் கொள்ளுங்கள்...'' என்றார்.

புதையல் என்றதும், மூவரும் ஆர்வம் அடைந்தனர். புதையல் வைத்துள்ள இடத்தை கேட்டனர். அவர் சிரித்துக் கொண்டே, ''புதையலை இப்போது தேடி எடுக்க வேண்டாம்... என் மறைவுக்குப் பின், நம் நிலத்தை தோண்டி, புதையலை எடுக்க வேண்டும்...'' என்றார்.

மகன்கள் மூவரும், எப்போதும் போல கவலையின்றி ஊர் சுற்றி வந்தனர்.

ஒரு நாள் பொன்னுசாமி இறந்தார். அவரது மறைவை எதிர்பார்த்திருந்த, மகன்கள், புதையலைத் தேடும் வேலையில், முழு மூச்சாக ஈடுப்பட்டனர். காய்ந்து கிடந்த நிலத்தில், மூலைக்கு ஒருவராய் அமர்ந்து தோண்ட ஆரம்பித்தனர். பல நாட்கள் தோண்டியும், பலனில்லை.

மனம் வெறுத்து, சகோதரர்கள் வீடு திரும்பினர். இரவில் துாக்கம் வராமல் தவித்தனர்; அப்போது, அடை மழை பெய்தது; அவர்கள் தோண்டிய மண் நனைந்து நெகிழ்ந்தது

மறு நாள் காலை-

மூன்று பேரும், நிலத்துக்கு சென்றனர். அது, விவசாயத்துக்கு ஏற்றதாக மாறி இருப்பதை கண்டனர். நிறைய பழ மரங்களை, சாகுபடி செய்து, கவனமுடன் பராமரித்தனர். மரங்கள் வளர்ந்து, கனிகளால் குலுங்கின.

பழங்களை பார்த்த மூன்று பேரும், 'தந்தை கூறிய புதையல் இதுதான்!' என்று உணர்ந்தனர். அதன்பின், ஊர் சுற்றுவதை நிறுத்தி, ஒழுங்காக விவசாயம் செய்து, பணக்காரர்களாக மாறினர்.

குட்டீஸ்... உழைப்பே உயர்வு தரும் என்று புரிந்து கொண்டீர்களா!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us