தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/உதவி உயர்!

உதவி உயர்!

உதவி உயர்!


PUBLISHED ON : ஏப் 24, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 24, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிவகாசியில் வசித்தான் கபிலன்; வசதியான குடும்பத்தை சேர்ந்தவன்; மிகவும் கஞ்சன்; உதவி கேட்டால், கண்ணில் படாமல் ஓடி விடுவான்.

அவனது நண்பன் கமலன்; உதவுவதில் மகிழ்வான். தன்நலன் பாராமல், உதவி செய்ததால், அவன் குடும்பத்தில் வறுமை ஏற்பட்டது. மிகவும் கஷ்டப்படும் அவனை கண்ட கபிலனுக்கு ஒரே மகிழ்ச்சி.

ஒரு நாள் -

'யாருக்கும் உதவாதே என்று கூறினேன்... இப்போது கஷ்டப்படுகிறாய்...' என்று ஏளனமாக சிரித்தான் கபிலன்.

பதில் சொல்லாமல் மவுனம் காத்தான் கமலன்.

அவன் குடும்பம் வறுமையில் தள்ளாடியது. நிலமை நாளுக்கு நாள் மோசமானது. குடும்பத்தை காப்பாற்ற முடியாமல் திணறினான். எனவே, கபிலனிடம் வேலை கேட்டு சென்றான்.

அதிக வேலை வாங்கி, குறைந்த ஊதியம் தந்தான்; வேறு வழியின்றி, மாடு போல் உழைத்தான் கமலன்.

ஒரு நாள், உடல் சோர்வுடன் வீட்டிற்கு புறப்பட்டான்; சமையல் செய்ய வழியின்றி தவித்திருந்தாள் மனைவி; போதிய உணவு கிடைக்காமல் அவள் உடல் மெலிந்து விட்டது.

இருவருக்கும் சாப்பிட சிறிது உணவே இருந்தது; சாப்பிட அமர்ந்த போது, கதவு தட்டும் சத்தம் கேட்டது.

துறவி ஒருவர் பசி என உணவு கேட்டு நின்றார்.

உணவில் பாதியை தந்து உபசரித்தான் கமலன்.

மறுநாள் -

கமலனை பாராட்டி, அபூர்வ கண்ணாடியை பரிசளித்து, 'இது ஒருவரின், மூன்று ஆசைகளை பூர்த்தி செய்யும்...' என ஆசி வழங்கி மறைந்தார் துறவி.

முதல் வரமாக, மனைவியின் உடல் நிலை சீராக வேண்டும் என நினைத்தான்.

அவள் உடல் நலம் பெற்றாள்.

இரண்டாம் வரமாக, இழந்த சொத்துகள், வீடு, பணம், நகை திரும்ப வேண்டும் என கேட்டான்.

அனைத்தும் கிடைத்தன.

மூன்றாவதாக, என்ன உதவி செய்தாலும், என் நிலை மாறக்கூடாது; பணமும் குறையக் கூடாது என்று கேட்டான்.

அதுவும் கிடைத்தது.

அவற்றைக் கொண்டு, மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தான் கமலன்.

இதை பார்த்த கபிலனுக்கு, அதிர்ச்சி.

செல்வந்தனாக மாறிய ரகசியத்தை கேட்டான்.

உண்மையை கூறினான் கமலன்.

மாயக்கண்ணாடியை அபகரித்தான் கபிலன்; எந்த வரத்தையும் அது தரவில்லை; மிகுந்த ஏமாற்றமடைந்தான்.

குழந்தைகளே... எப்போதும் அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட கூடாது.

எஸ்.சுமதி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us