PUBLISHED ON : ஆக 02, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உயிரினங்களின் வாழ்வுக்கு ஆதாரமாக அமைந்தது காற்று. அதில் இருந்து ஆக்சிஜனை பிரித்து எடுக்கிறது நுரையீரல். இதில் உள்ள, 'அல்வியோலி' என்ற செல் தான் ஆக்சிஜனை உறிஞ்சி, உடலின் மற்ற பாகங்களுக்கு அனுப்புகிறது.
ஆனால், அல்வியோலி செல்லுக்கு, தண்ணீரில் இருந்து ஆக்சிஜனை பிரித்தெடுக்கும் திறன் இல்லை. அதனால் தான் நீருக்குள் மனிதனால் சுவாசிக்க முடிவதில்லை.
கடல் நீரில் வாழும் மீன், தண்ணீரை வாய் வழியாக உறிஞ்சுகிறது. மண்டை ஓட்டு வழியாக செலித்தி, செவுளுக்கு அனுப்புகிறது. செவுள் பஞ்சு போல செயல்பட்டு, நீரில் ஆக்சிஜனை உறிஞ்சி பிறபாகங்களுக்கு அனுப்புகிறது. இந்த முறையில் தான் மீன் நீருக்குள் சுவாசித்து உயிர் வாழ்கிறது.
●●●

