தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/இசைக்கருவிகளில் எத்தனை வகைகள்

இசைக்கருவிகளில் எத்தனை வகைகள்

இசைக்கருவிகளில் எத்தனை வகைகள்


PUBLISHED ON : பிப் 01, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 01, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆப்பிரிக்க மக்களின் ரத்தத்தோடு கலந்தது இசை. ஒரு அம்மா பாடும் தாலாட்டிலிருந்து, கிராம பண்டிகைகள் வரை இசைக் கருவிகளும், பாடலும் ஆப்பிரிக்க வழி வாழ்வின் அடிப்படை நாதமாகும். அன்றாட வாழ்வின் அலுப்பை உடைக்கும் சிறப்பு வழியாக இசையை மக்கள் பயன்படுத்தினர். மிக பிரமாண்டமாக குடையப்பட்ட இசைக்கருவி யிலிருந்து, சில தகடுகளால் உருவான சாதாரண இசைக் கருவி வரை ஆப்பிரிக்கா முழுவதும் எண்ணற்ற இசை கருவிகள் இருக்கின்றன.

கையிலே பியானோ!



சான்சா எனப்படும் இந்த இசை கருவி சிறிய பியானோ. ஆனால், இதனை கைகளில் ஏந்தி இசைக்கலாம். சத்தம் எழுப்பும் பலகை, ஒலியை கூட்டி காட்டும் அமைப்பு ஆகியவைகளோடு குறுகிய மரத்துண்டுகள் அல்லது இரும்பு துண்டுகள் இணைக்கப்படும். ஒவ்வொரு துண்டையும் இசையாளர் இசைத்து குறிப்பிட்ட ஒலிதனை எழுப்பச் செய்வர். இதற்கு அவரது கட்டை விரலை பயன்படுத்துவர். இந்த 'கட்டை விரல்-பியானோக்கள்', 'பயணியர் நண்பன்' என அழைக்கப்படுகின்றன. ஏனெனில், மக்கள் இதனை இடம் விட்டு இடம் போகும் போது இசைத்தப் படி போகலாம். இதனை அங்கோலாவின் உம்பன்டூ மக்கள் பயன்படுத்துகின்றனர்.

ஆரம்பகால ஆம்பிளிபையர்!



இந்த சைலோபோனின் இசை தரும் கீ-க்களின் கீழே இருப்பவை, பானை போல செய்யப்பட்ட கொடிகளில் வளரும் காய் வகை தாவரத்தின் பழங்களாகும். இந்த பழம் நன்றாக காய வைக்கப் பட்டு இப்படி கட்டப்படுகிறது. இவை கீ-க்கள் அடிக்கப்படும்போது உயர்வான நல்லிசையை தருகின்றன. இந்த சைலோபோன்கள் பிற கருவிகளோடு அல்லது தனியாக வாசிக்கப்படும். வட-மேற்கு கானாவில் உள்ள கிராமத்தில் முக்கிய அறிவிப்புகளை செய்ய இசைக்கப்படுகிறது.

இரட்டை மணிகள்!



இசை கலைஞர்கள் இந்த இரட்டை மணியை கையில் பிடித்தபடி இசைப்பர். இந்த உலோக குடுவைகளை குச்சி, இரும்பு தடி அல்லது கொம்புகளை வைத்து அடித்து இசைப்பர். இது போன்ற சத்தம் எழுப்பும் இசை கருவி கள் திருவிழாக்களிலும், முகமூடி நடனங்களிலும் பயன்படுத்தப்படும். இந்த இரட்டை மணிகள் மேற்கு ஆப்பிரிக்காவின் காமரூனிலிருந்து வருகிறது.

ஹை லைப் இசை!



'ஹை லைப் இசை' என்பது ஆப்பிரிக்கா மட்டுமல்லாது ஐரோப்பா முழுவதும் பிரபலமானது. இது கானா மற்றும் சிபாரா லியோனி ஆகிய பகுதிகளின் பாரம்பரிய இசையை அடிப்படையாக கொண்டதாகும். ஆனால், படை அணிவகுப்பு இசை, இறைவனை துதிக்கும் பாடல் இசை, கடலோடிகள் சேர்ந்து பாடும் பாடல் இசை மற்றும் லத்தீன் அமெரிக்க இசை ஆகிய இசைகளின் பாதிப்பும், 'ஹை லைப்' இசையில் உண்டு. இவ்விசையில் முக்கிய அங்கம் வகிப்பது கிடாரும், பாடகர்களும்தான்.

எல்லாவிதமான டிரம்கள்!



சமையல் பானையின் மேல் பரப்பப்பட்ட தோலினால் அமைந்த சாதாரண டிரம் முதல் முகமூடி நடனத்தில் பயன் படுத்தப்படும் டிரம் வரை ஆப்பிரிக்காவில் எண்ணற்ற விதமான டிரம்கள் உள்ளன. சில டிரம்கள் கைகளுக்கு கீழே வைத்து கொள்ளுமளவு சிறியதாக இருக்கும். வேறு சில டிரம்களோ வாசிப்பவர் உயரத்திற்கு இருக்கும். ஒரே மரத்திலோ, மரக் கட்டைகள் இரும்பு வளையத்தால் பிணைக்கப்பட்டோ டிரம் செய்யப்படும். பழைய டின்கள், எண்ணெய் டிரம்கள் அல்லது கொட்டாங்குச்சிகளில் விளையாட்டு டிரம்களை வாசிப்பது, வாண்டுகளின் வேலை.

லூட்!



இது நரம்பால் இசைக்கப்படும் யாழ் போன்ற கருவியாகும். ஆப்பிரிக்காவின் அழகான இசை கருவிகளில் இதுவும் ஒன்று. மாலி பகுதியின் முக்கிய இசை கருவியாகும். காய வைக்கப்பட்ட காய், பாதியாய் வெட்டப்பட்டு மாட்டு தோலால் மூடப்படும். இது ஒலியை கூட்டச் செய்யும். இந்த லூட் அல்லது கோரா எனப்படும் இசை கருவியை உடம்பினோடு அணைத்தப்படி நரம்புகளை விரல்களால் மீட்டி இசைப்பர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us