
செடிகள் வெவ்வேறு காலங்களில் துரித வளர்ச்சி அடையும். மிதவெப்பமுள்ள பகுதிகளில் கோடையிலும், இளவேனிற் காலத்திலும் விரைந்து வளரும். வெப்பமான அல்லது வறண்ட பிரதேசங்களில் மழை பெய்கிற போதெல்லாம் செடிகள் வேகமாய் வளரும்.
சூரிய காந்தி போன்ற தாவரங்கள், ஒரு பருவத்தில் மட்டுமே வளர்ந்து, விதைகளை உற்பத்தி செய்த பின் மடிந்து விடுகின்றன. கசகசாச் செடியையும் உதாரணமாய்க் கூறலாம்.
'ஸைப்ரஸ்' போன்ற ஊசியிலை மரங்கள் மற்றும் குத்துச் செடிகள் ஆண்டுக்கணக்கில் வளர்கின்றன. அவை, ஆண்டுதோறும் விதைகளை உற்பத்தி செய்கின்றன.
'ஓக்' போன்ற மரங்களின் பூக்கள் சிறியனவாயும், வெளிறிய பூக்களோடும் காணப்படுகின்றன. இவற்றின் மகரந்தம் காற்றின் மூலம் மற்ற, 'ஓக்' மரங்களுக்கு எடுத்துச் செல்லப்படும்.
பழம் தரும் மரங்களின் பூக்கள் பளிச் சென்று, பெரிதாக இருக்கும் (இவற்றின் மகரந்தம் பெரும்பாலும் பூச்சியினங்களால் எடுத்துச் செல்லப்படும்)
எல்லா மரங்களும் ஆண்டுதோறும் புதிய இலை மற்றும் பூக்களை வளரச் செய்கிறது. பெரிதாய் வளரும். மேலும் அதன் அடிமரம் கடினமாய் வளரும்.