sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/என்னால் முடியும்!

என்னால் முடியும்!

என்னால் முடியும்!


PUBLISHED ON : ஜன 04, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 04, 2020


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உடல் குறைபாடுகளை பொருட்படுத்தாமல், 'என்னால் முடியும்' என, செயல்பட்டவர்கள், பலதுறைகளில் வெற்றி பெற்றுள்ளனர். இப்படி உழைத்து, சாதித்த சிலரை பற்றி பார்ப்போம்...

ஸ்டீபன் ஹாக்கிங்!

கடுமையான, 'ஆம்யோ டிரோபிக் லேடரல் சிலிரோசிஸ்' என்ற, தசையூட்டமற்ற பக்க மரப்பு நோயால் பாதிக்கப்பட்டு, உடல் உறுப்புகள் செயல்பாட்டை இழந்தவர். ஆனாலும், நம்பிக்கை இழக்காமல், இயற்பியலில் மாபெரும் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினார். கருந்துளை பற்றிய ஆய்வில் அரிய உண்மைகளை உலகுக்கு தந்தார்.

ஜான் மில்டன்!

பிரபல ஆங்கில எழுத்தாளர் மற்றும் கவிஞர்; 43வது வயதில், பார்வைத் திறனை இழந்தார். அதன்பின், விடாமுயற்சியால், பல புத்தங்கள் எழுதி புகழ் பெற்றார்.

ஸ்டீவ் ஒன்டர்!

பிரபல பாடகர். பிறக்கும் போதே, பார்வைத்திறன் இல்லை. ஆனால் முடங்கிவிடவில்லை. பல பாடல்களை இயற்றி பாடி, இசைத்தட்டுகள் தயாரித்தார்; இசைக்கருவிகளை வாசித்து அசத்தினார். 20ம் நுாற்றாண்டில் சிறந்த இசை கலைஞர்களில் ஒருவராக திகழ்ந்தார்!

பிராங்க்ளின் ரூஸ்வெல்ட்!

இளம் வயதிலேயே, போலியோவால் பாதிக்கப்பட்டவர். மனம் தளராமல் அமெரிக்க அரசியலில் ஆதிக்கம் செலுத்தினார். அமெரிக்க குடியரசு தலைவராக, நான்கு முறை பதவி வகித்தார்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்!

இயற்பியல் கண்டு பிடிப்புகளின், முன்னுதாரணமாக கருதப்படுபவர். மூன்று வயது வரை பேச்சே வரவில்லை. கற்பதில் குறைபாடு உள்ளவராக கருதப் பட்டவர். அதை எல்லாம் புறந்தள்ளி, அறிவியல் உலகில் வியக்க வைக்கும் கண்டுபிடிப்பகளை நிகழ்த்தினார். உலக புகழ் பெற்றார்.

லுட்விக் வான் பிதோவன்!

கேட்கும் சக்தியை, 26வது வயதில் முழுமையாக இழந்தவர். பல பாடல்களுக்கு வியக்கும் வண்ணம், இசை அமைத்தார். இவரது இசையில் பிரபலமான பாடல்கள் அனைத்துமே, கேட்கும் சக்தியை இழந்த பின் உருவாக்கப்பட்டவை.

- செல்வகணபதி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us