தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/இளஸ்... மனஸ்... (124)

இளஸ்... மனஸ்... (124)

இளஸ்... மனஸ்... (124)


PUBLISHED ON : ஆக 03, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 03, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள ஜெனி ஆன்டிக்கு, கல்லுாரி மாணவன் எழுதிக் கொண்டது. வீட்டுக்கு ஒரே மகன்; ரொம்ப செல்லம் ஆன்டி. என் மம்மி ரொம்ப குள்ளம்; டாடி நல்ல உயரம். ஆனாலும், நான் குள்ளமாக இருக்கிறேன்.

இதனால், நான் சந்திக்கும் அவமானம் கொஞ்சம் நஞ்சமல்ல. இன்னும் கொஞ்ச நாட்களில், வளர்ச்சியும் குறைந்து விடும். 'இப்படியே குள்ளமாக இருந்து விடுவேனோ' என நினைத்து, மிகவும் கவலையாக உள்ளது.

உயரமாக வளர வழி சொல்லுங்க ஆன்டி. என் மாமா மகள் வேறு, 'குள்ளா... குள்ளா...' என கூப்பிட்டு, மானத்தை வாங்குறா... உயரமா வளர வழி சொல்லுங்க ஆன்டி.

ஹா...ஹா... மகனே... உயரம் என்பது, நம்முடைய பரம்பரை ஜீன்களை பொறுத்தது என்பது உனக்கும் தெரிந்தது தானே... 60 - 80 சதவீதம் இது பாரம்பரியத்தை பொறுத்து தான் அமையும். எஞ்சியுள்ள, ௨௦ சதவீதம், நாம் சாப்பிடும், சத்தான உணவுகள், எக்சர்சைஸ் மூலம், வளர்ச்சியை துாண்ட முடியும்.

பெண்களுக்கு, 18 வயது வரையும், ஆண்களுக்கு, 21 வயது வரை வளர்ச்சி உண்டு. அதற்கு மேல் உள்ளவர்களும் சத்தான உணவுகள் உண்பதன் மூலம், ஹார்மோன்கள் துாண்டப்படுவதால், வளர்ச்சியை சற்று அதிகரிக்கலாம்.

முக்கியமாக, உயரமாக வளர வேண்டுமானால், எலும்புகள் வளர்ச்சியடைய வேண்டும். இதன் வளர்ச்சிக்கு கால்ஷியம் சத்து மிக மிக அவசியம்; எனவே, கால்ஷியம் சத்து, அதிகமுள்ள காய்கறிகள், பழங்கள் நிறைய சாப்பிடு. பீன்ஸ், கேரட், கோஸ், பச்சை காய்கறிகள், முளை கட்டிய தானியங்களில் புரதச்சத்து அதிகம் உள்ளது; இது, எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது.

மீன் அதிகம் சாப்பிடும் போது, அதில் உள்ள ஒமேகா -3 எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. ஒவ்வொரு நாளும், 2 - 3 கப் பாலுடன், வேக வைத்த முட்டை சாப்பிடு; முட்டையில், கால்ஷியம், புரோட்டின், விட்டமின் உள்ளதால், எலும்பு வளர்ச்சிக்கு துணை செய்கிறது.

சிக்கன், மட்டன், சோயாவால் செய்யப்பட்ட பொருட்களில், புரோட்டின் நிறைய உள்ளது. கடல் பாசிகளால் செய்யப்பட்ட, 'கோரல் கால்ஷியம்' எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. தினமும் அதிகாலை எழுந்தவுடன், வெறும் வயிற்றில், நான்கு டம்ளர் தண்ணீர் குடி. இது, உடம்பில் வளர்சிதை மாற்றம் ஏற்பட உதவுகிறது.

இது போக, தினமும், ஒரு ஐந்து, 'புல் அப்ஸ்' எடு; வாலி பால், பாஸ்கெட் பால் விளையாடு. எதையாவது பிடித்து தொங்குவது, குதிகாலை உயர்த்தி, கைகளை மேலே தூக்கியபடி நடப்பது என, பயிற்சி செய்.

மாலை நேரத்தில், உடம்பில் வெயில் படும்படி, 'ஸ்கிப்பிங்' பண்ணு. சூரியக் கதிரில் இருக்கும் விட்டமின், 'டி' எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. கால்ஷியம், மெக்னீஷியம், பொட்டாஷியம் உள்ள உணவு பொருட்களை, நிறைய எடுத்துக் கொள்; இவற்றை தொடர்ந்து செய்து வந்தால், நிச்சயமாக, நீ உயரமாக வளர முடியும்.

விரைவில் உன் ஆசை நிறைவேற வாழ்த்துகள்!

- அன்புடன், ஜெனிபர் பிரேம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us