தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/இளஸ்... மனஸ்... (62)

இளஸ்... மனஸ்... (62)

இளஸ்... மனஸ்... (62)


PUBLISHED ON : அக் 03, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 03, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்பு பிளாரன்ஸ்...

உடற்பயிற்சி ஆசிரியரின் மனைவி நான்; 31 வயதாகிறது; எட்டு வயது மகன், 3ம் வகுப்பு படிக்கிறான். அவன் செயல்பாடுகள் வினோதமாக இருக்கின்றன.

எட்டு ஊருக்கு கேட்கும்படி விசிலடிக்கிறான். என்னை, 'அம்மா...' என அழைப்பதில்லை; விசிலடித்தே கூப்பிடுகிறான்; சந்தோஷம் என்றாலும், வருத்தம் என்றாலும் விசில்தான். இது தொடர்பாக பள்ளியிலும் புகார் வந்திருக்கிறது.

சினிமா பாடல்களை விசில் மூலம் பாடுகிறான். பலமுறை சொல்லி விட்டேன்... அடித்தும் பார்த்தாச்சு... திருந்த மாட்டேங்கிறான்; என்ன செய்யலாம் பிளாரன்ஸ்...

மகன் விசில் சத்தம் கேட்டு தவிக்கும் அம்மா...

போன தலைமுறையினர், நடிகர்கள் எம்.ஜி.ஆர்., சிவாஜி ரசிகர்களை, 'விசிலடிச்சான் குஞ்சு' என கேலி செய்வர்.

உதடுகளை குவித்தோ, நாக்கை மடித்தோ, விரல்களை வாய்க்குள் நுழைத்தோ, ஏதோ ஓர் உபகரணம் வைத்தோ, விசில் சப்தம் ஏற்படுத்துகின்றனர்.

கால்பந்து போன்ற விளையாட்டுகளில், நடுவர் விசில் அடிப்பார்; பேருந்துகளில், நடந்துனர் விசில் அடித்து வழி நடத்துவார்.

நகரத் தெருக்களில் குப்பை சேகரிக்கும் வாகனங்கள், வருகையை தெரிவிக்க விசில் ஊதுவர். இரவு காவலர்கள், தெருவுக்கு தெரு விசிலடித்து, இருப்பை தெரியப்படுத்துவர். கிராமங்களில் ஆடு மேய்ப்பவர்கள், மலை உச்சியில் நின்று விசில் அடித்து, அடிவாரத்துக்கு தகவல் தெரிவிப்பர்.

விசில், வாய் பேச்சை விட, வேகமாய் பயணிக்கும் தன்மை உடையது. ஆபத்தில், பதட்டத்தில் இருப்பவரை அமைதிப்படுத்தும் விசில்.

மிகச் சிறந்த தகவல் தொடர்பு. வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியாத உணர்வை, விசிலில் வெளிப்படுத்தலாம். புயல், பூகம்பம், வெள்ளம், தீ விபத்து போன்ற நேரங்களில், விசில் மிகச்சிறந்த எச்சரிக்கை ஒலி.

உலக மக்களில், 13 சதவீதம் பேர் விசிலடிக்கும் திறன் பெற்றவர்கள்; விசில் அடித்தால், பொருளாதார பிரச்னை வரும் என்பது, ஐரோப்பா, ஆசியா கண்டங்களை உள்ளடக்கிய ரஷ்ய நாட்டவர் நம்பிக்கை.

ஆப்ரிக்க நாடான எஸ்டோனியாவில் விசில் அடித்தால், வீடு தீப்பிடிக்கும் என பயப்படுகின்றனர். ஐரோப்பிய நாடான நார்வேயில் விசில் அடித்தால், மழை வரும் என எதிர்பார்க்கின்றனர்.

ஆசிய நாடான ஜப்பானில், இரவில் விசில் அடித்தால், அமைதி குலைந்து, ஆபத்து தேடி வரும் என திகிலில் தவிப்பர். ஐரோப்பிய நாடான இங்கிலாந்தில், விசில் அடித்தால், மரணம் அல்லது பேரழிவு நிச்சயம் என அஞ்சுவர்.

ஆசிய நாடான சீனாவில், யோகா அறிஞர்கள், விசில் அடித்து, வினோத உயிரினங்களை வரவழைக்க முடியும் என்கின்றனர். கப்பலில் விசில் அடிப்பதை, மாலுமிகள் தடை செய்திருக்கின்றனர்.

மத்திய கிழக்கு நாடான துருக்கியின் வடபகுதியில் பாரம்பரியமாக பேசும் மொழி விசில். சிறைகளில் விசில் அடிக்கக் கூடாது என்ற சட்டம் இருக்கிறது. ஆசிய நாடான இந்தோனேஷியாவில், ஆந்தை மற்றும் பாட்டில் கழுத்து டால்பின் போன்றவை விசில் அடிக்கும் திறமை பெற்றவை.

புராதன கிரேக்க, ரோம நாகரிகங்களில் விசில் அடிக்கும் வழக்கம் இருந்தது. முதன் முதலாக விளையாட்டில், 1878ல் விசில் உபயோகப்படுத்தப்பட்டது; டோரா, பெப்பாபிக், டைகர் அண்ட் பூ கார்ட்டூன்களில் விசில் அடிக்கும் காட்சிகள் உள்ளன.

சர்வதேச அளவில், ஆண்டுதோறும் விசிலடிக்கும் போட்டி நடக்கிறது; கடந்த, 2013ல், சாம்பியனாக க்யூன்கூ காவ் தேர்வு பெற்றார்.

விசிலடிக்கும் பெண்ணும், சப்தமிடும் கோழியும், கடவுளுக்கும், மனிதனுக்கும் பொருந்தமில்லாதவர் என்ற பழமொழி கூட இருக்கிறது.

உன் மகன் விஷயத்துக்கு வருவோம்...

மனிதர்கள், மூன்று வயதிலிருந்தே விசில் அடிக்கும் பழக்கத்தை கற்கத் துவங்கி விடுகின்றனர். விசில் மகிழ்ச்சியின் விளை பொருள்; வேலை செய்யும் களைப்பு தெரியாமலிருக்க சிலர் விசில் அடித்து மகிழ்வர்; மன அழுத்தத்தை குறைக்கும் கலை வடிவமாகவும் உள்ளது.

'ரவுடிகள் தான் விசில் அடிப்பர்' என்ற நம்பிக்கை தமிழ் சமுதாயத்தில் இருக்கிறது. இதை தவிர்க்க, 'பள்ளியில், பொது இடத்தில், தெருவில், இரவில் விசில் அடிக்காதே...' என, மகனுக்கு அறிவுரைக்கவும். பிறருக்கு தொந்தரவு தராமல் குறைந்த சத்தத்தில் விசில் அடித்து மகிழ அனுமதி கொடுக்கவும்.

நன்கு படித்து பெரியவனான பின், விசிலடிப்பதை நிறுத்தி விடுவான் மகன் அல்லது விசில் சப்தத்தை வைத்தே பல இசை வடிவங்களை உருவாக்கும் ஞானியாக மாறி விடக் கூடும். எனவே, கவலைப்பட தேவையில்லை. விசில் அடித்து பிரபலமாக வாழ்த்துகள்.

- சங்கீத மனதுடன், பிளாரன்ஸ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us